பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அஞ்சு பேர் - அவங்களைப் பஞ்சபாண்டவங்கன்னு சொல்லு வாங்க. அஞ்சாவது ஆள் யாருன்னு ஞாபகத்துக்கு வரல்லே...'

"கிருபளானியா?” 'ஊஹாம், வேறு யாரோ ஒருத்தர் - சட்டுனு ஞாபகத் துக்கு வரலே. அவங்க அஞ்சு பேரும் காந்திஜி பாலிஸியை அப்படியே பின்பத்தறவங்க, நேரு அப்படி இல்லை. இளே ஞர்களைத் திருப்பி ஒரு லீடர்ஷிப் பீல்ட்' பண்ணிக்கிட்டு வந்தார். 1930-இல் அவர் காங்கிரஸ் தலைவர். முப்பத்திரண் டிலே ஜெயிலுக்குப் போளுர். முப்பத்தஞ்சிலேயும் போய். வந்தார். அந்த வருஷத்தில் லக்னே காங்கிரஸ் தலைவராக ஆஞர். அவர் இரண்டாவது தடவையாகத் தலைவராய் வரக் கூடாதுன்னு சிலர் சொல்லிப் பார்த்தாங்க. காந்திஜி கேட் கல்லே. r - . -

நேருஜி தம்முடைய தாயார், தந்தை, மனைவி. எல்லாை யும் இழந்து விட்டிருந்த சமயம் அது. அப்பவே அவர் முற் போக்குவாதி. இப்ப அவர் மகளும் தன்னை முற்போக்குவா தின்னு சொல்லி ஏமாத்திக்கிட்டிருக்காங்க. இது வேறே. அது கிடக்கட்டும். 1920-லே கல்லூரியை விட்டு வெளியே வந்த ஒரு செட் காந்தியைச் சுத்திச் சுத்தி வந்தாங்க. அதே மாதிரி 1930இலே வந்த ஒரு செட் நேருவைச் சுத்தினங்க (மேஹ்ராலி, ஜயப்பிரகாஷ் போன்றவர்கள்). அப்பவே நேரு பலத்தை வல்ல பாய் உடைக்கப் பார்த்தார். காந்திஜி விடல்லே. யுத்தம் ஆரம் பிச்சவுடன் வல்லபாயின் கை ஓங்கி விட்டது. இளைஞர்கள்கூட அவர் பக்கம் சேர்ந்துட்டாங்க. - ۰ - ب • . . . . 47-இல் சுதந்திரம் வந்தது. நேருஜி பிரதமரானர். வல்ல பாயைக் கண்ட்ரோல் பண்ண நினைச்சார். முடியல்லே. தகராறு வளர்ந்துக்கிட்டே இருந்தது. இவங்களைச் சமரசம் பண்ணி வைக்கிறதே காந்திஜிக்கு வேலையாப் போச்சு தினம் சாயங் காலம் பிர்லா மாளிகையிலே இவங்க ரெண்டு. பேரையும் கூட்டி வச்சு அவர் சமரசம் பண்ணி வைப்பார். அதுக்கு முன்னடி 120 வயசு வரை வாழ்வேன்னு காந்திஜி சொல்லிக், கொண்டிருந்தாரா? அப்புறம் செத்துப் போளு தேவலாம்னு கூடச் சொல்ல ஆரம்பிச்சுட்டார். சரி: நேரமாகிறது; லோக,

89.

89