பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/9

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நேருஜியிடம் அவருக்குள்ள மதிப்பும், மரியாதையும் எவ்வளவு அழுத்தமானது, ஆழமானது என்பதை நான் அன்றுதான் புரிந்து கொண்டேன்.

அன்று பகல் சாப்பாட்டின் போது தம்முடைய தர்ம சங்கடமான நிலையை அவர் எங்களுக்கு விளக்கிய போது தான் காரில் நாங்கள் இருவரும் ஏறிக்கொண்டது எத்தனை பைத்தியக்காரத்தனம் என்று புரிந்தது.

ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு அவரை இப்போது மீண்டும் திருமலைப் பிள்ளை ரோடிலுள்ள இல்லத்தில் சந்தித்தேன்.

“என்ன... வாங்க... என்ன சங்கதி? சொல்லுங்க!” என்றார்.

"தாங்கள் சுயசரிதை எழுத வேண்டும்" என்றேன். "வேண்டாம், அது எதுக்கு?" என்று மொட்டையாகப் பதில் சொல்லி மறுத்து விட்டார்.

"தங்கள் சுயசரிதை என்றால் அதில் தமிழ் நாட்டின் சரித்திரம் இருக்கும். காங்கிரசின் சரித்திரம் இருக்கும்” என்று வாதாடி வற்புறுத்தினேன்.

"வேண்டுமானால் நீங்க 'பயாக்ரபி'யா எழுதுங்க. எனக்கு ஆட்சேபமில்லை" என்றார்.

"நான் எழுதுவதானால் தங்களுடைய உதவி இல்லாமல் முடியாது. எனக்குப் பல தகவல்கள் தேவைப்படும். தங்களை அடிக்கடி வந்து தொந்தரவு செய்வேன்" என்றேன்.

"வாங்க... வாங்க..." என்றார்.

"சொல்றீங்களா?" என்று கேட்டேன். "சொல்றேன்னேன்" என்று கூறி விட்டு டில்லிக்குப் புறப்பட்டுப் போய் விட்டார் !

நான் விடவில்லை : டில்லிக்குப் போய் அவரைப் பிடித்துக் கொண்டேன். அங்கே தினமும் பார்லிமெண்டுக்குப் போகவும், நிஜலிங்கப்பாவுடன் பேசவுமே அவருக்கு நேரம் சரியாக இருந்தது. இதற்கிடையில் விசிட்டர்கள் வேறு. இவ்வளவுக்கும் இடையில் எனக்கும் நேரத்தை ஒழித்து வைத்துக் கொண்டிருந்தார் அவர்.

“புவனேசுவர் காங்கிரசிற்குப் பிறகு சில நாட்களுக்கெல்லாம் நேரு காலமாகி விட்டாரே, அதற்கு முன்னால் நேருஜி

9