பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

டில்லியில் இன்ஞெரு நாள். பக்தர்கள் பகவானைச் 'சிக்' கெனப் பிடித்தது போல நானும் காமராஜைச் 'சிக்கெனப் பிடித்துக் கொண்டு, "போன தேர்தல்லே காங்கிரஸ் தோல்வி அடைஞ்சதுக்கு என்ன காரணம்னு நினைக்கிறீங்க?" என்று கேட்டேன்..

“சரியான வாரிசு இல்லே. அரிசி கிடைக்கல்லே. காங்கிர ஸ்-க்குள் பூசல். பொருமை வளர்ந்துட்டுது.' - “அடுத்த தேர்தல்லே காங்கிரஸுக்கு எத்தனை பீட் கிடைக் கும்?' . - . - 'நூற்றைம்பது nட் விண்டிகேட் காங்கிரஸுக்கு நிச்சயம் கிடைக்கும். பிரசாரம் போதாது. இன்னும் நல்லா செய்யனும்."

நிலப் பட்டா செய்யறது பற்றி உங்ககருத்து என்ன?" 'ஊரிலே தனியா நிலம் இருந்தா எல்லாக் கட்சியும். சேர்ந்து நிலமில்லாதவங்க எத்தனை பேர் இருக்காங்கன்னு லிஸ்ட் போட்டு. ஆளுக்கு இவ்வளவு நிலங்கிற விஸ்ட்டைச் சர்க்காருக்கு அனுப்பின பட்டா போட்டுக் கொடுக்கலாம்.”

"பணக்காரங்க ரொம்பப் பேருக்கு நிலத்தைக் கொடுத்துட் டாங்க்ள்ாமே?" . .

'கொடுக்கல்லே: அவங்களே எடுத்துக்கிட்டாங்க... நிலத் துக்கு உச்ச வரம்பு இங்கே பதினைந்து ஏக்கர்னு வெச்சிருக்காங்க. கேரளாவிலேயும் பதினைந்து ஏக்கர்னு வெச்சிருக்காங்க. இது சரியில்லே. கேரளாவிலே ஐந்து ஏக்கர் நிலம் இருந்தா இங்கே அது பதினைந்து ஏக்கர் நிலத்துக்குச் சமம். அப்படி வித்தியாசம்

91

91