பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/92

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இருக்கச்சே, இங்கே, அங்கே ரெண்டு இடத்திலேயும் பதினைந்து ஏக்கர் ஸீலிங் என்பது எப்படிச் சரியாகும்?"

"அதை விடுங்க. ஒரு தமிழர் இந்த நாட்டின் பிரதம மந்திரியா வர முடியுமா?"

"முடியும். ஆனா இப்ப முடியாது; அதுக்குச் சரியான சூழ்நிலை இல்லை. நான் காங்கிரஸ் பிரஸிடெண்ட்டா இருக்கக் கூடாதுன்னு இந்திரா காந்தி நினைச்சாங்க. மொரார்ஜி தேசாயும் நினைச்சார். இதிலே அவங்க ரெண்டு பேரும் ஒண்ணு!"

"ஜனநாயகத்துக்கு ஆபத்து, இந்தியாவுக்கு ஆபத்து - இந்த இரண்டிலிருந்தும் தேசத்தைக் காப்பாத்தணும்னு சொல்றீங்களே, அந்த ஆபத்து எப்படி, எந்த உருவிலே வந்திருக்குன்னு சொல்ல முடியுமா?"

"இந்த நாட்டிலே பிரதமரை விலைக்கு வாங்கலாம். ஜனநாயகத்தையும் விலைக்கு வாங்கலாங்கிற நிலைமை இப்போ வந்துகிட்டிருக்கு. இதைவிட நம்ம நாட்டுக்கு வேறே என்ன ஆபத்து வேணும்? மருந்து கண்ட்ரோல், சிமெண்ட் கண்ட்ரோல் - இந்த ரெண்டிலேயும் ரொம்ப ஊழல் நடக்கிறது. லட்சம் லட்சமாப் பணம் புரளுது. ஏராளமான வெளிநாட்டுப் பணம் நம்ம நாட்டிலே நடமாடுது. இந்தப் பணமெல்லாம் நம்ம அரசியலைப் பாழடிக்காதா? இந்த மாதிரி அந்நிய நாட்டுப் பணம் நம்மை ஆட்டிப் படைச்சா நம்ம நாடு 'வீக்'காகத் தான் போகும். ரஷ்யப் பணம், அமெரிக்கப் பணம் ரெண்டுமே தப்புதான்.இதனாலே நம்ம சுதந்திரமே போயிடுமே! இன்றைய அரசியல்லே, முதல் இடம் பணத்துக்குத்தான்னு ஆயிட்டுது. அதுக்கு அப்புறந்தான் ஜாதி மத்தது எல்லாம். கம்யூனிஸ்ட் கட்சிங்க வேறே. இதிலே வலது கம்யூனிஸ்ட்டால்தான் ஆபத்து அதிகம்னு நான் நினைக்கிறேன். அவங்களுக்குத்தான் ரஷ்யப் பணம் ரொம்பக் கிடைக்குது. அது நம் நாட்டை ரொம்பக் கெடுக்குது. இதைக் கவர்ன்மெண்ட் பார்த்துச் சீக்கிரமா நிறுத்தணும், நமக்கு 'இதெல்லாம் தெரியுது, ஆனா நாம் என்ன - செய்ய முடியும்? அயல் நாடுகளுக்கு இங்கே எதுக்குத் தனியா ஒரு வர்த்தக அதிகாரி? ரஷ்யாதான் எல்லாமே அரசாங்க வழியா நடக்கணும்னு சொல்லுதே, அவங்க மட்டும் இங்கே

92