பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடத்தற சில சாமான்கள் வியாபாரத்தை ஸ்டேட் டிரேடிங் கார்ப்பரேஷன் வழியா நடத்தக் கூடாதா? தனிப்பட்ட ஆளுங் களுக்கு ஏன் கொடுக்கணும்? கம்யூனிஸ்ட் பலம் அதிகமானல் இந்திரா கேபினெட்லே க் பொளிஷனையெல்லாம் கம்யூனிஸ்ட் எடுத்துக்குவானே...? அப்புறம் சிமெண்ட் கண்ட்ரோல் இருந் தப்பேர சிமெண்ட் தெற்கே இருந்து வடக்கே போய்க்கிட்டு இருந்தது. ரயில் சார்ஜ் அரசாங்கம் கொடுத்தது. இதனலே அங்கே இருக்கறவங்களுக்கு அதிக லாபம் சம்பாதிக்க முடி யல்லே. பணம் கொடுத்து 'டி கண்ட்ரோல் பண்ண வச்சாங்க. வடக்கே சிமெண்ட்டுக்கு ஷார்ட்டேஜ் வந்தது. நல்ல லாபம் சம்பாதிச்சாங்க. --.

மருந்து விலைக் குறைப்பும் அப்படித்தான். அவசியமான, மருந்து விலை ஏறிப் போச்சு தேவையில்லாத மருந்துகள் விலை மட்டும் குறைஞ்சுது. இதிலே யாருக்கு லாபம்? மருந்துக் கம் பெனிக்காரர்களே பணம் கொடுத்து செய்த வேலை இது. இந்தப் பணமெல்லாம் எங்கே போகுதுன்னு தெரியணும்... இதையெல்லாம் எப்படித் தடுக்கிறது? எல்லாரும் ஒண்னு சேர னும். இந்த ஆபத்தையெல்லாம் எடுத்துச் சொல்லிப் பிரசாரம் செய்யனும். பத்திரிகைகளெல்லாம் இந்திரா காந்தியை சப் போர்ட் பண்ணுது. ரேடியோ. அவங்க கையிலே இருக்குது. பிரஸ் இருக்குது. பிறகு எப்படி பப்ளிக் ஒபினியன் உருவா

ti ? கு நாம் எவ்வளவு பேசிளுத்தான் என்ன? ஆயிரம் பேர் கேட்பாங்க, அவ்வளவுதான். அதுவே பேப்பர்லே வந்தா லட்சம் பேர் ப்டிப்பாங்க. பேப்பர்லே வந்ததை வெச்சுக்கிட்டு அப்புறம் பத்து லட்சம் பேர் பேசுவாங்க. நாம் பேசறது பேப் பர்லே வராட்டா எப்படி?” . ... *

பத்திரிகைகளின் சக்தியைப் பற்றிக் காமராஜ் இப்படிச் சொன்னதும் 'நானும் ஒரு பத்திரிகையாளன்' என்ற முற்ையில் என் உள்ளம் பெருமிதத்தால் நிறைந்தது. அடுத்த கேள்வியை நான் போடுவதற்குள், தலைவர் இருக்கிருரா?' என்று கேட்டுக் கொண்டே யாரோ ஒரு பிரமுகர் உள்ளே வரவே, "இதோ வந்து விட்டேன்!” என்று காமராஜ் எழுந்தார். 'வந்தவர்

93

93