பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/96

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

"அனுப்பறான். அவனே அனுப்ப மாட்டான்; தனுஷ்கோடி நாடார் மூலமாத்தான் அனுப்புவான். அவர் நூறு ரூபா அனுப்புவார். இங்கே நாலு பேர் உட்கார்ந்து சாப்பிடணுமே! இந்த விலைவாசியிலே நூறு ரூபா பத்துமா?நீங்களே சொல்லுங்க."

"மெட்ராசுக்குப் போய் மகன்கிட்டேயே இருந்துடுங்களேன்..."

“நல்லா இருக்க விடுவானே...? ஆவடி காங்கிரஸின் போது போனேன். இரண்டு நாள் தங்க விடலே.ஊரைச் சுற்றிக் காட்ட ஏற்பாடு பண்ணான் பார்த்தேன்.'எல்லாம் பார்த்தாச்சு இல்லையா? புறப்படு விருதுநகருக்கு'ன்னு ரயிலேற்றி விட்டுட்டான். நான் சொன்ன பேச்சைக் கேக்கற பிள்ளையா அவன்? காமராசான்னு நாடே அவனைத் தலையிலே தூக்கி வச்சுக்கிட்டுக் கூத்தாடுது. அதுலே எனக்கு சந்தோசந்தான். இருந்தாலும்...”

'"சின்ன வயசிலே அவரை நீங்க பள்ளிக்கூடத்திலே படிக்க வெச்சு வீட்டிலேயே மடக்கிப் போட்டு வளர்த்திருக்கணும்."

"நல்லாத் தங்குவானே வீட்டிலே! மதுரை உண்டா, மன்னார்குடி உண்டான்னு ஓடிக்கிட்டே இருப்பான். கொஞ்சம் அரிசியும்,படி நெய்யும் கொடுத்துப் படிப்புச் சொல்லிக் கொடுக்க வாத்தியாருகூட வச்சோம். படிச்சானா? இல்லே! இந்த நாட்டிலே படிக்காத பிள்ளைங்களே இருக்கக் கூடாதுன்னு இப்ப சொல்றான். ஊர் ஊராப் பள்ளிக்கூடம் கட்டிப் பிள்ளைங்களைப் படிக்க வைக்கறான்"

சிறு வயதிலேயே வீட்டை மறந்து நாட்டுக்கு உழைப்பதிலேயே நாட்டம் கொண்ட காமராஜ் 1921-ஆம் ஆண்டுக்குப் பிறகு முழு நேரக் காங்கிரஸ் ஊழியராகவே மாறி விட்டார். உத்தியோகம், திருமணம் - இவ்விரண்டும் தம்முடைய போக்குக்கு ஒத்து வராது என்று முடிவு செய்த அவர். அவை பற்றிய சிந்தனைக்கே இடம் தருவதில்லை. யாராவது அந்தப் பேச்சை எடுத்தாலும், "அதெல்லாம் எதுக்கு....?ம்... அப்புறம்?" என்று பேச்சை மாற்றி விடுவார்.

விடுதலைப் போராட்டங்களில் முழு மூச்சுடன் ஈடுபடுவதற்கு முன்னால் சில நாட்கள் அவர் இன்ஷூரென்ஸ் ஏஜண்டாயிருந்தார். ஆனால், அந்த வேலையை அவர் வெகு சீக்கிரத்திலேயே

96