பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/98

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

போலீசார் அழைத்துக் கொண்டு போய் விட்டார்கள் என்பதை அறிந்து அவர் மிகவும் வருத்தப்பட்டார்.பிறகு, ‘நாகபுரிக் கொடிப் போராட்டம்’ என்ற பெயரில் ஓர் இயக்கம் நடைபெற்றது. அங்கே ஒரு குறிப்பிட்ட தெரு வழியாகத் தேசியக் கொடியைப் பிடித்துச் செல்லக் கூடாது என்று போலீசார் தடை உத்தரவு போட்டதன் விளைவாக எழுந்த போராட்டம் இது.

ஒத்துழையாமை இயக்கம் நின்று போன ஏக்கத்தில் சோர்வடைந்து போயிருந்த காங்கிரஸ்காரர்களுக்கும்,காமராஜுக்கும் நாகபுரிக் கொடிப் போர் பெரும் ஊக்கத்தையும், உற்சாகத்தையும் உண்டாக்கியது.நாட்டின் எல்லா இடங்களிலிருந்து தொண்டர்கள் நாகபுரியை நோக்கிப் புறப்பட்டார்கள்.காமராஜ் சும்மா இருப்பாரா?பலரைச் சேர்த்து நாகபுரிக்கு அனுப்பி வைத்தார். அடுத்தாற் போல் இன்னொரு கூட்டத்தைச் சேர்த்துக் கொண்டு தாமும் புறப்பட திட்டமிட்டு வேலை செய்து கொண்டிருந்தார். இதற்குள் நாகபுரிப் போராட்டத்தில்,சமரசம் ஏற்பட்டு விட்டதால் அப்போதும் காமராஜுக்குச் சிறை செல்லும் வாய்ப்பு கிட்டாம்லே போய் விட்டது.

பின்னர், ஜெனரல் அவாரி என்ற தேசபக்தர் நாகபுரியில் வாள் போராட்டம் ஒன்றை நடத்தினார். தெருவில் வாள் எடுத்துப் போக அனுமதி வேண்டும் என்று சட்டத்தை மீறுவதே அதன் நோக்கம். அதே மாதிரிப் போராட்டம் ஒன்றை மதுரையிலும் நடத்த வேண்டுமென்று கரங்கிரஸார் தீர்மானித்தார்கள்:1927-ஆம் ஆண்டில் தேசபக்தர் சோமயஜுலு தலைமையில்பட்டாக் கத்திகள் தாங்கி ஊர்வலமாகச் சென்றார்கள்.இந்த இயக்கத்திற்குக் காமராஜ்தான் ஐந்து பட்டாக்கத்திகள் தயார் செய்து கொடுத்தார். இப்போதும் போலீசார் இவர்களில் யாரையுமே கைது செய்யாமல் விட்டு விட்டார்கள்.காரணம், அப்போதைய சட்ட மந்திரியான சி.பி. ராமசாமி ஐயர் செய்த சூழ்ச்சிதான். மதுரையில் யாரையும் கைது செய்ய அவர் விரும்பவில்லை.கைது செய்தால் அந்த இயக்கத்துக்கு வலு ஏற்பட்டு விடும் என்பதற்காக அவர், 'தெருவில் பட்டாக் கத்தி எடுத்துச் செல்ல மலபாரில் மட்டும்தான் அனுமதி பெற

98