பக்கம்:சிவகாமியின் செல்வன்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேண்டும். மற்ற இடங்களுக்கு அனுமதி தேவையில்கல என்று கூறி விட்டார். அதனால் அந்த இயக்கம் ஆரம்பத்திலேயே பிசுபிசுத்துப் போயிற்று. -

இதற்கு அடுத்த போராட்டம் சென்னையில் நடந்தது. மவுண்ட்ரோடிலுள்ள நீல் என்ற வெள்ளைக்காரன் சிலையை அப் புறப்படுத்த வேண்டும் என்பதற்காக நடந்த சத்தியாக்கிரகப் போராட்டம் அது. 1857-ஆம் ஆண்டில் நடந்த சிப்பாய்க் கலகம் என்று சொல்லப்பட்ட முதலாவது சுதந்திர யுத்தத்தில் ஜெனரல் நீல் என்பவன் இந்தியரைச் சித்திரவதை செய்தான். அந்தக் கொடியவனுக்கு மவுண்ட்ரோடில் சிலே ஒரு கேடா? அந்தச் சிலையை அப்புறப்படுத்திவிட வேண்டும்' என்று கொதித்து எழுந்தார்கள் பலர். அதற்காகச் சத்தியாக்கிரகம் செய்தவர்களில் பெரும்பாலோர் தண்டனை பெற்றுச் சிறைக் கும் போய் விட்டார்கள். எஞ்சியிருந்தவர்கள் காமராஜூம் இன்னும் சிலருந்தான். காமராஜ் அந்த இயக்கத்தைத் தொடர்ந்து நடத்த விரும்பினர். மகாத்மா காந்திஜியிடம், சென்று விஷயத்தை விளக்கினர். மகாத்மாவும் நீலன் சிலையை அப்புறப்படுத்த வேண்டியதுதான்' என்று கூறி, அந்த இயக்கத் துக்குத் தம்முடைய சம்மதத்தைத் தெரிவித்து விட்டார். ஆயினும் 'நீலன் சில ஒழிப்பு இயக்கம் தொடர்ந்து நடந்து கொண்டிருந்த போதே சைமன் கமிஷனைப் பகிஷ்கரிக்கும் வேலை வந்து விட்டதால், அந்தச் சில எதிர்ப்பு இயக்கத்தைக் கொஞ்சம் தள்ளிப் போடும்படி ஆகி விட்டது. இவ்வளவு ப்ோராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டும் சிறைக்குப் போகா மலே தப்பித்துக் கொண்டிருந்த காமராஜ் கடைசியாக 1930ஆம் ஆண்டில்தான் சிறைத் தண்டனை பெற்ருர்

99