பக்கம்:சிவஞானம்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்களிடத்து அன்பு 93

தம்மிடத்தில் வைத்துக்கொள்ளவும் அவருக்கு விருப்ப மில்லை.

"என் செய்வார் பாவம் ! அம்முதியவர் சிறிது நேரம் ஒன்றும் தோன்றப் பெருது விழிக்கலாயினர். முடிவில் அவருக்கு ஒரு நூதன எண்ணம் பிறந்தது. அஃதென்ன வ்ென்ருல், தாம் மேலே அணிந்திருந்த மெல்லிய துணியின் ஒரு மூலையில் அப்பூச்சியினை இலகுவாக முடிந்து ஒரு புறத்தே வைத்திருந்து, பின்னர் அதிகாலையில் எங்கேனும் தக்க விடத்தில் அதனை விட்டுவிடுதலேயாம். அப்பெரியவர் அவ்வாறே அதனைத் தம் மேலாடையில் மெல்ல முடிந்து ஒரு

புறத்தே வைத்து உறங்கலாயினர்.

'பொழுது புலர்ந்தது ; அம்முதியவர் முடிந்து வைத்த மூட்டைப் பூச்சியை முற்றிலும் மறந்தார். ஆதலின் அவர், காலைக் கடன்களை முடித்துக் கொண்டு குளித்தற்பொருட்டுக் குளத்தில் இறங்கினர். அப்போது அப்பெரியவர் தற்செயலாய் அம்முடிப்பைக் கண்டார். உடனே, அவருக்கு மூட்டைப் பூச்சியின் எண்ணம் வந் தது. ஆ நான் பாவி ; என்ன காரியம் செய்தேன் ! அந்தோ! அப்பூச்சி இத்துணை நேரம் இறந்தேயிருக் கும்! என்று கூறித் தம்மைத் தாம் நொந்து கொண்டே விரைந்து கரைக்கேறி அம்முடிப்பை மெல்லென அவிழ்த்தார். T ஆ என்ன ஆச்சரியம் ! அஃது ஒரு சிறந்த இரத் தினமாய் இருந்தது. அதனைக் கண்டதும் அவ்வேழை முதியவர் மிகுதியும் வியப்புற்ருர் இன்னலுற்று இருந்தும் நமக்கு இஃது இறைவன் அளித்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவஞானம்.pdf/100&oldid=563132" இலிருந்து மீள்விக்கப்பட்டது