பக்கம்:சிவஞானம்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்களிடத்து அன்பு 9 5

வேண்டியவர்கள் ; நம் நாட்டில் புகழை நாட்ட வேண் டியவர்கள். ஆதலால் சிறுவர்களே, நீங்கள் ஒவ்வொரு வரும் ஒழுக்கத்தாலும், கொள்கையாலும் சிறந்திருக்க முயலுங்கள் ; உங்கள் நண்பர்களுக்கும் இதனைப் பன் முறையும் இடித்திடித்துச் சொல்லுங்கள். அருமைச் சிறுவர்களே, ஒன்றைச் சொல்லுதல் யாவர்க்கும் எளிது ; ஆனல், அவ்வாறு புரிதலோ அரிது - அரிது. ஆதலால், நீங்கள் ஒழுக்கத்தினையே உறுதியாய்ப் பிடி யுங்கள். அவ்வொழுக்கம் ஒருநாளில் வாராது. ஆதலின், பன்ளுைம் சலிப்பின்றிப் பழகுங்கள்-பழகுங்கள்.

ஒழுக்கம் என்பது யாது ? எல்லா உயிர்களிடத் தும் அன்பாய் இருத்தலினும் உயர்ந்த ஒழுக்கம் இவ் வலகில் இல்லை. அன்பென்னும் அருங்குணத்தில் யாவும் அடங்கும். எல்லா உயிர்களிடத்திலும் அன் புள்ள ஒருவன் பிறரிடம் கடுஞ்சொல் கூறமாட்டான்;

ஒருவரையும் வஞ்சிக்க எண்ணமாட்டான் ; ஈகையை மறுக்கான் ; இறுமாப்புங் கொள்ளான்; பொய் பேசான் ; பிறர் வருந்த மனம் பொறுக்கமாட்டான். முடிவாகக்

கூறுமிடத்து எவ்விதத் தீயகுணமும் அவனிடத்து எக் காலத்தும் தலைகாட்டாது. ஆதலால், அன்பைப் பெற் றவன் அனைத்தையும் பெற்றவன் ஆகின்ருன். அவ் வன்பு சிறிதும் இல்லாதவனுக்கு எவ்வித நற்குணமும் எக்காலத்தும் இராது. ஆதலின், இன்பச் சிறுவர் களே, நீங்கள் அன்பென்னும் அழியாச் செல்வத்தை நாள்தோறும் போற்றுங்கள்- போற்றுங்கள்.

'அன்பு என்பது யாது? அதனை எவ்வாறு பெறு

வது ? என உங்களுக்கு ஐயம் நிகழலாம். பிள்ளைகளே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவஞானம்.pdf/102&oldid=563134" இலிருந்து மீள்விக்கப்பட்டது