பக்கம்:சிவஞானம்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{} 6 சி வ ஞ | ண ம்

அன்பு என்பது இதுதான்' என்று ஒருவரால் சுட்டிக் காட்ட இயலாது. அது நம் உள்ளத்தே தோன்றும் ஒருவித நிகழ்ச்சி. அதனையே நாம் ஆசை என்று. சொல்லுகின்ருேம். நமக்கு மாம்பழத்தைக் கண்டால் ஆசை யுண்டாகிறது ; நம் நண்பனைக் கண்டால் ஆசையுண்டாகிறது. தாய்க்குக் குழந்தையைக் கண் டால் ஆசையுண்டாகிறது. அந்த ஆசை என்பதே அன்பு, பக்தி, கருணை யெனப் பல பெயரைப் பெறுகின் றது. ஆதலால், அஃது எல்லாரிடத்தும் இயல்பாய் உள்ள தொன்றே. ஆல்ை, அது சிலரிடத்தே பொய், பொருமை, வஞ்சனை முதலிய தீய குணங்களால் மறைக்கப்பட்டுக் கன் இயற்கை ஒளி மழுங்கிக் கிடக் கின்றது. அன்றியும், அநேகம் அதனைச் சிறந்த வழியில் செலுத்துவதில்ஃல. சிலர் வேடிக்கை விளையாட் டுக்களில் மட்டும் அன்பைச் செலுத்துகின்ரும்கள். மற்றும் சிலர் உண்ணுதலிலும் உடுத்துதலிலும் மட்டும் அன்பைச் செலுத்துகின்ருர்கள். வேறு சிலர் மனைவி மக்களிடத்து மட்டும் அன்பைச் செலுத்துகின் ருர் கள். அவ்வாறு புரிவதால் அவர்கள் முடிவில் துன்பத்தையே அநுப விக்கின்ருர்கள் அழியாத புகழையும், ஒழியாத இன்பத் தையும் முற்றும் இழக்கின்ருர்கள்.

' அருமைச் சிறுவர்களே, ஆயின், அவ்வன்பை நாம் எங்குச் செலுத்துதல்வேண்டும் ? எல்லாம் வல்ல் இறைவனிடத்தும், பெரியோர் பலரிடத்தும் செலுத் துங்காலத்து அது பக்தி என்று அழைக்கப்படுகின்றது: நமக்குச் சமமாய் உள்ள உயிர்களிடத்துச் செலுத்தும் போது அன்பு என்று பெயர் பெறுகின்றது நம்மினும் தாழ்ந்த பிறவுயிர்களிடத்துச் செலுத்தும்போது அது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவஞானம்.pdf/103&oldid=563135" இலிருந்து மீள்விக்கப்பட்டது