பக்கம்:சிவஞானம்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102. சி வ ஞ | ண ம்

பரிசும் பாராட்டும்

ஏழு நாட்கள் எண்ணிக் கழிந்தன. எட்டாம் நாள் எப்போது வரும் என்று காத்துக் கொண்டிருந்த சிறுவர்கள் காலை எட்டு மணிக்கே நீராடித் தூய உடை உடுத்திக் கொண்டு குப்புசாமிப் பிள்ளை அவர் களுடைய வீட்டை அடைந்தனர். என்ன வியப்பு! வீடு பெரிய திருவிழாக் கொண்டாட்டம் போல அலங் கரிக்கப்பட்டிருந்தது. குப்புசாமிப் பிள்ளை சிறுவர்களே அன்புடன் அனைத்து வரவேற்ருர், சிறுவர்கள் அவருக்கு வணக்கம் செலுத்தி அவருடன் வீட்டினுள் சென்றனர்.

வீட்டுக் கூடத்தில் அவர்கள் கண்ட காட்சி அவர் களுக்குப் பெருவியப்பினையும் மகிழ்ச்சியையும் ஒருங்கே அளித்தது. கூடத்து நடுவே பெரிய மேசை நாற்காலி கள் போடப்பட்டிருந்தன. அவற்றின்மேல் சிறுவர் களுக்குப் பிடித்தமான அவல், பொரி, கடலை, பழங்கள், இனிப்புப் பொருள்கள் யாவும் வைக்கப்பட்டிருந்தன. நாற்காலியில் நாய்க் குட்டிச் சாமியார் புன்முறுவ லோடு உட்கார்ந்திருந்தார். சுவர்களில் மன்னுயிரை யும் தன்னுயிர்போல் எண்ணி வாழ்ந்த புத்தர், இயேசு நாதர், மகாத்மா காந்தியடிகள், ஆப்ரகாம்லிங்கன் போன்ற பெரியவர்களின் படங்களும், உழைப்பால் உயர்வடைந்த பெரியவர்களான தாமாஸ் ஆல்வா எடிசன், சர். தி. முத்துசாமி ஐயர், பேராசிரியர் நமச்சிவாய முதலியார், மணி. திருநாவுக்கரசர், மறை மலையடிகளார். தமிழ்ப் பெரியார் திரு. வி. கலியான சுந்தரனுர் ஆகியவர்களின் படங்களும் மாட்டப் பட்டிருந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவஞானம்.pdf/109&oldid=563141" இலிருந்து மீள்விக்கப்பட்டது