பக்கம்:சிவஞானம்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7

உயிர்களிடத்து அன்பு

என் அன்னையும், என்னைக் காணவேண்டும் என்னும் அவாவில்ை, அம்மா-அம்மா’ என்று வாய்விட்டு அரற்றிக் கொண்டிருப்பாள். நான் அருகே வந்ததும், அவள் அன்போடு எனக்குப் பால் ஊட்டுவாள். ஆல்ை, என் நண்பனே, நான் எவ்வளவு நேரம் பால் உண்ணுவேன் என்று எண்ணுகின்ருய் ? இரண்டு வாய்ப்பாலே னும் நான் அருந்தியிருக்கமாட்டேன். அதற்குள், அக்கொடியவன் ஓடிவந்து, இழுத்துப் பிடித்து என்னை என் அன்னையின் முன்னங்கால்களோடு சேர்த்துக் கட்டி விடு வான். பின்னர், அவன் என்அன்னையிடம் உள்ள பாலை ஒரு பெரிய செம் பில் நிறையக் கறந்து கொள் வான்-ஆ ! என் நண்பனே, அச்சமயம்

என் மனம் எவ்வாறு துடிக்கும் ?-அதனை நீ --- யே எண்ணிப்பார். அக் கொடுமையைக் காண என் நெஞ்சம் சிறிதே னும் சகிக்குமா ?-யாருக்குத்தான் இயலும் ? ஆதலால், நான் எங்ங்னமேனும் அக்கட்டினை அவிழ்த்துக் கொண்டு, அருகே சென்று, பால் உண்ண முயலுவேன். அப்போது, அப்படுபாவி என்னைக் கோபத்துடன் உறுத்துப் பார்த்து, என் தலையில் ஓர் அடி கொடுத்து, மறுபடியும் என்னை என் அன்னையின் முன்னங்காலோடு இறுகச் சேர்த்துக் கட்டிவிடுவான். அச்சமயம், நான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவஞானம்.pdf/14&oldid=563046" இலிருந்து மீள்விக்கப்பட்டது