பக்கம்:சிவஞானம்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 is சி HII கு Ff , Ħ! ம்

தோலைக் கொண்டு வைக்கோலினுல் செய்த பதுமை யாக இருந்தது.-ஆ ! அப்போது நான்பட்ட துன்பம் எல்லாம் வல்ல இறைவனுக்கே தெரியும்....... (சிறிது நேரம் சும்மா விருக்கின்றது)......அருமை நண்பா ! எனக்கு இதற்குமேல் பேசச் சக்தியில்லை...... இளைப்பு மேலிடுகின்றது ...... கை கால்கள் நடுக்க முறுகின்றன ........கண்கள் ...... சுழலுகின்றன ......... பேசுதற்கும் m = m H. H. H. நா......எழவில்லை........விழுந்து அந்தோ! ....... ஜகதீசா!...... அந்தோ! ஜக-தி-சா!......

(இவ்விதம் கூறிக்கொண்டே அக்கன்று கீழே விழுந்து இறந்து விட்டது. அருகே இருந்த குதிரைக் குட்டி சிறிது நேரம் ஒன்றும் தோன்றப் பெருமல் திகைத்து நின்றது.) குதிரைக் குட்டி-(கண்களில் நீர்ததும்ப) ஆ நண்பனே ! -நண்பனே ! உனக்கு முடிவில் இக்கதியா நேர்ந்து விட்டது ஐயோ ! இதை அறிந்தால், உன் தாய் என்ன துயர முறுவாள் ! - ஆ ! அக் கொடியவனுக்கு இனியேனும் புத்திவருமோ? ஒ இறைவனே ! ஈசனே ! இதுவும் உன் திருவுளச் சம்மதமோ ?(துயரத்துடன் தன் தாயைக் காணச் செல்லுகின்றது.)

அன்புள்ள சிறுவர்கள்

சிவஞானம் என்னும் சிறுவன், இதைப் படிக்கும் போது பெரிதும் துன்புற்ருன். அவனுக்குத் துயரத் தால் குரல் கம்மிற்று. கண்களில் நீர் ததும்பி அவனே அதற்குமேல் படிக்க வொண்ணுது செய்தது. மற்றச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவஞானம்.pdf/19&oldid=563051" இலிருந்து மீள்விக்கப்பட்டது