பக்கம்:சிவஞானம்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்களிடத்து அன்பு If,

பாட்டினை நீ அறிந்தால் நெஞ்சம் திடுக்கிட்டு அயர்வாய். (வருத்தத்தேரடு) ஆ இறைவா ! இன்பமாய்க் காட்டில் திரிந்திருந்த எங்களை மானுடர்கட்கு மீளா அடிமைகளாக்கி வருத்துவது தங்கள் கருணைக்கு அழகாகுமா ? ஒ இறைவனே ! ஏழைகளாகிய எங்கள் மீது சிறிது கடைக்கண் நோக்கலாகாதா ?

குட்டி-(ஆச்சரியத்துடன்) அம்மணி, நாம் காட்டிலா வசித்திருந்தோம் ஆ ! எனக்கு இத்துணை நாட் களாக இது தெரியாதே!-(ஆர்வத்துடன்) தாயே, எப்போது வசித்திருந்தோம் ? நம் வாழ்நாட்களை அங்கே எவ்வாறு கழித்து வந்தோம் ? அவைகளை யெல்லாம் எனக்குத் தயை செய்து சொல்லுங்கள் அம்மா !

குதிரை-என் கண்ணே, அந்தப் பாக்கியம் பெற நீயும் கொடுத்து வைக்கவில்லை ; நானும் கொடுத்து வைக்கவில்லை. நமது முன்னேர்கள் முதன் முதல் காட்டில்தான் வசித்து வந்தனராம்.-ஆ அந்த இன்ப வாழ்க்கையை நான் எவ்வாறு எடுத்துரைப் பேன் !-அங்கே, எங்குப் பார்த்தாலும் பசும்புற் கள், பச்சைப் பசேலென்று செழித்தோங்கி வளர்ந் திருக்குமாம்; இடையிடையே உள்ள காட்டாறு களில், தெளிந்த நீர்ப்பெருக்குப் பாலெனப் பொலிவுற்று வழிந்தோடுமாம். நம் இனத்தவர் கள், அந்த இன்ப வனத்தில் தம் இச்சையாய்த் திரித்து, வயிருரப் புல் தின்று, நீர் அருந்தி,

ஆனந்தமாய் வாழ்ந்து வந்தார்களாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவஞானம்.pdf/22&oldid=563054" இலிருந்து மீள்விக்கப்பட்டது