பக்கம்:சிவஞானம்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 சிவ ஞானம்

டும் ? அம்மணி ! அதையேனும் தயைசெய்து எனக்கு விளங்கச் சொல்லுங்கள்.

குதிரை-(ஒருவாறு தன் மனத்தைத் தேற்றிக்கொண்டு) ஆ அதனை ஏன் கேட்கின்ருய் ? என் அல்லல் வாழ்க்கையைச் சொல்லவும் வேண்டுமா ? என் கண்ணே, அதனை நினைப்பினும் என் மனம் நடுக்க முறுகின்றது ; எனினும் சிறிது உரைக்கின்றேன்.

என் செல்வமே, எனக்கு இப்போது வயது பதின்ைகு நடக்கின்றது : நான் இதுகாறும் பட்ட துன்பங் களுக்கு ஓர் அளவில்லை. நான், குதிரை வியாபாரம் செய்யும் ஓர் மகமதியன் வீட்டில் பிறந்தேன் ; அவன் என்மீது எவ்வளவு அன்பு காட்டினன் என்பதை இரண்டொரு சொற்களால் இயம்பிவிடு கின்றேன். நான் பிறந்த சிலநாட்களுக்குள் அவன் என் தாயை வேருெருவனுக்கு விற்றுவிட் டான். அப்போது நான் பட்ட துயரம் சிறிதன்று. பாலின்மையாலும், பராமரிப்பு இன்மையாலும் நான் பெரிதும் துன்புற்றேன்.

என் எசமான ன் வியாபாரத்தின் நிமித்தமாக அடிக்கடி வெளியூர்கட்குச் சென்று வருவான். அக்காலங் களில் அவன் வீட்டிலுள்ள சிறுவர்கள் எனக்குப் புரிந்த தீமைகள் மிகப்பல. அக்கொடியவர்கள் என் முதுகின்மீது ஏறிச் சவாரி செய்ய முயல்வார்கள் : வேலிகளின் மீதும், முட் புதல்களின் மீதும் என்னை அச்சுறுத்தித் துரத்தி, அவைகளைத் தாண் டச் செய்வார்கள் ; கற்களையும், கழிகளையும் என் மீது வாரி எறிந்து என்னை விரைந்து ஓடச் செய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவஞானம்.pdf/25&oldid=563057" இலிருந்து மீள்விக்கப்பட்டது