பக்கம்:சிவஞானம்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்களிடத்து அன்பு ","W

தேகத்தில் ஒட்டுவதில்லை, என்று பொய் புகன் ருன். அவரும் அதனை உண்மையென நம்பித் தம் இருப்பிடம் சென்ருர். குட்டி-ஐயோ ! இது என்ன அநியாயம் ! எளிய பிராணிகளாய நம்மையா அவன் வஞ்சிக்கவேண் டும்! அந்த வஞ்சகன் நெஞ்சம் கல்லோ இரும்போ அம்மா, கடவுளும் அவனுக்குத் துணை செய்தாரே ! இது வல்லவோ ஆச்சரியம் ! குதிரை-குழந்தாய், நீ அவ்விதம் எண்ணவேண்டாம்! ஈசன் அவனுக்கும் தக்க தண்டனையே அளித்தார் .

என் கண்ணே, மோசம் என்றைக்கும் நாசம் அல்லவா ? அவன் வஞ்சகமும் ஒரு நாள் வெளி யாகி விட்டது. அச்செல்வரின் புதல்வர்கள்

அவன் கள்ளத்தனத்தைக் கண்டு பிடித்து விட்ட னர். அப்போது அவனுக்கு விழுந்த அடிகளுக் கோ கனக்கேயில்லை. அவனும் அன்றே அவ் விடத்தைவிட்டு அகன்று விட்டான். பின்னர் எச மானர், வேருெரு புதிய ஆளை வேலையில் அமர்த்

தினர். அவன் உயர் குணம் வாய்ந்த உத்த மன் , கள்ள உள்ளம்

சிறிதும் இல்லாதவன் ; தன்னைப் போல பிறரை யும் பார்க்கும் தூயோன். அவன் என்னை அல் லும் பகலும் அன்புடன் பாதுகாத்து வந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவஞானம்.pdf/34&oldid=563066" இலிருந்து மீள்விக்கப்பட்டது