பக்கம்:சிவஞானம்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்களிடத்து அன்பு 55.

அதிக விலை கொடுத்து வாங்க ஒருவரும் முன்வர வில்லை.

ான் ஆருயிரே, இவ்விதம் இரண்டு மூன்று நாட்கள் கழிந்தன. அப்போது நல்ல வெயிற் காலம். புற் கட்டின் விலையும் அதிகரித்து விட்டது. வேலையின் றிக் கொட்டகையில் கிடக்கும் எனக்கு மிக்க விலை கொடுத்துப் புல் வாங்கிப் போடுதற்கு நம் எச மானிக்குப் ப்ோதிய பொருள் இல்லை. ஆதலால், நான் அன்று முழுவதும் பட்டினியாகவே கிடந் தேன். பசியின் கொடுமையால் நான் அன்று இரவு முழுதும் உறக்கமின்றி வருந்தினேன். சிறு குழந்தையாகிய நீயும், பால் அருந்தவேண்டி என்னை யொருபுறம் வருத்திக் கொண்டிருந்தாய்.

துநாள் காலை ஐந்து மணி யிருக்கும், பசியோ பொறுக்க முடியவில்லை. வெளியே சென்ருல் அங் குள்ள இலை தழைகளையேனும் சிறிது அருந்திப் பசியாறலாம் என்னும் எண்ணத்துடன் நான் என்னைப் பிணித்திருந்த கயிற்றைப் பலமாய் இழுத் துப் பார்த்தேன். என் நல்ல காலம் அக்கயிறு எளிதில் அறுந்து போயிற்று. நொண்டிக் கொண்டே, நான் மெதுவாய் என் கொட்டகை யைவிட்டு வெளியே வந்தேன். அது கண்ட நீயும் என்னிடம் பால் பருகுதற்கு என்னைப் பின் தொடர்ந்தாய். நான் வெளியே வந்ததும், ஆகா ரத்தின் பொருட்டுச் சிறிது தூரம் மெல்ல நடந்து சென்றேன். என் கெட்ட காலம், அப்போது ஒரு பச்சிலையும் தென்படவில்லை. ஆதலால், நான் அதற்கு அடுத்த வீதிக்குச் செல்ல எண்ணங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவஞானம்.pdf/62&oldid=563094" இலிருந்து மீள்விக்கப்பட்டது