பக்கம்:சிவஞானம்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்களிடத்து அன்பு 65

தயக்காரனைத் தாங்கள் கண்டீர்களா ? ' என்ருன் வேருெருவன். o -----

"ஆம் கண்டேன் :அவன் இன்னமும் நொண்டி யாகவே கிடக்கின்றன். அன்றியும் அவன் இப்போது மிகத் தாழ்ந்த நிலையில் உண்பதற்கும் உடுப்பதற்கும் கூடப் போதிய பொருள் இல்லாமல் வருத்தமுற்றுக் கிடக்கின்ருன். ஆல்ை, அவன் பிடிவாத குணமும் முரட் டுத் தனமும் இப்பொழுதும் ஒழியவில்லை. சமயம் வாய்த் தால் உங்களுக்கு அவனை நேரில் காட்டுகின்றேன்,' என்று விரைந்து கூறினர் அவ்வயோதிகர்.

"என்ன ஆச்சரியம் இது இவர் இவ்விதம் சொல்லுவதால் யாவும் உண்மை யென்றே தோன்று கின்றது. ஆனல் தாதா, டாக்கார்ட் dog - cart வைத்திருந்த அச்செல்வந்தர் இப்போதும் இருக் கின்ருரா ? அவரை எங்களுக்குக் காட்டுவீர்களா ?" என்று வியப்புடன் கேட்டான் மணிவண்ணன்.

"அப்பா, அவர் சில நாட்களுக்கு முன்னர்தான் இறந்துவிட்டார். ஆதலால், நான் அவரை எவ்வாறு காட்டுதல் கூடும் ? அவர் மைந்தர்கள் இப்போதும் இருக்கின்ருர்கள். அவர்கள் வெகு துலைவில் இல்லை. இவ்வூரில்தான் இருக்கின்ருர்கள். வேண்டுமானுல், நாளையதினம் உங்களை அவர்களிடம் அழைத்துச்செல் கின்றேன். அப்போதேனும் உங்களுக்குச் சந்தேகம் ஒழியுமா ?' எனப் புன்முறுவலுடன் புகன் ருர் குப்பு சாமிப் பிள்ளை.

சி. - :)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவஞானம்.pdf/72&oldid=563104" இலிருந்து மீள்விக்கப்பட்டது