பக்கம்:சிவஞானம்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 சி வஞா ன ம்

அச்சிறுவர்கள் அதன் அருகே சென்றதும் அசை வற்று நிற்கலாயினர். ஏனெனில், அஃது அப்போது தன் கண்களை மூடிக்கொண் டிருந்ததால், நல்ல உறக் கத்தில் இருந்தது என்று அவர்கள் எண்ணினர். ஆதி லால், அச்சிறுவர்கள் அங்கே சிறிதும் சந்தடி செய்யா மல் இருந்தனர். குப்புசாமிப் பிள்ளை அங்கே வந்ததும்

சிறிது நேரம் அதைக் கூர்ந்து நோக்கினர். பின்னர், அவர் உள்ளம் பதைத்து, ** ويچ ! உனக்கு முடிவில் இக்கதியா நேர்ந்து விட்டது -அந்தோ ! நான் பட்டதெல்லாம் பயனற்றுப் போயிற்றே !' என்று விம்மி விம்மி அழத் தொடங்கினர். அப்போது அங்குள்ள சிறுவரில் சிலர், ஆ தாதா, குதிரை இறந்தா போயிற்று !' எனக் கேட்டுத் திகைத்தனர் ; சிலர் கண்ணிர் வடித்தனர்; சிலர் தேம்பித் தேம்பியழுதனர்.

இவ்வாறு சிறிது நேரம் சென்றதும் குப்புசாமிப் பிள்ளை தம் மனதை ஒருவாறு தேற்றிக்கொண்டார். அச்சிறுவர்களும் கண்களைத் துடைத்துக்கொண்டனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவஞானம்.pdf/77&oldid=563109" இலிருந்து மீள்விக்கப்பட்டது