பக்கம்:சிவஞானம்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்களிடத்து அன்பு 71.

சில நிமிஷங்கள் வரை எல்லோரும் மெளனமாய் நின் றிருந்தனர். பின்னர், அம்முதியவர், சிறுவர்களை நோக்கி, 'பிள்ளைகளே, இக்குதிரையின் வயிற்றின் மீதுள்ள தழும்பை நோக்குங்கள். இதுதான் அச்சண் டாளப் பந்தயக்காரன் தன் கூரிய கத்தியால் குத்திய இடம்,' என்று மனம் பதைத்துக் கூறினர். அப்போது அச்சிறுவர்கள், ஐயோ பாவம் !" என்று மனமிரங்கி அந்தத் தழும்பைத் தம் கைகளால் தடவினர். அப் போது ஒரு சிறுவன் ஆ ! தாதா, இதன் முன்னங் காலில் நேர்ந்த பலத்த காயம் இன்னமும் ஆறவில் லையே!” என்று ஆச்சரியத்துடன் கூறினன். உடனே குப்புசாமிப்பிள்ளை மிக்க துயரத்துடன். 'ஆ1-அதனை ஆற்றுதற்கு நான் பெரிதும் முயன்றேன். என் முயற்சி யெல்லாம் விழலுக் கிரைத்த நீராகிவிட்டன. முடிவில், அதுவே இதற்கு எமனுய் முடிந்தது," என மெலிந்த குரலினுல் மொழிந்தார்.

இவர்கள் இவ்விதம் பேசிக்கொண் டிருக்கையில் சூரியன் மறைந்து விட்டான். அன்று அமாவாசையா தலால், அத்தோட்டத்தில் இருள் வந்து கவிந்து கொள்ள ஆரம்பித்தது. அதுகண்ட குப்புசாமிப் பிள்ளை அச்சிறுவர்களை நோக்கி, 'பிள்ளைகளே, இராக்காலம் சமீபித்துவிட்டது. உங்கள் தாய் தந்தையர் உங்களைக் காணுது வருந்துவர். ஆதலால், நீங்கள் சென்று வாருங்கள்,' என்று கம்மிய குரலுடன் மெல்ல உரைத் தனர்.

இத்தகைய நிலைமையில் அம்முதியவரை விட்டு நீங்குதற்கு அவர்கட்குச் சிறிதும் மனமில்லை. எனினும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவஞானம்.pdf/78&oldid=563110" இலிருந்து மீள்விக்கப்பட்டது