பக்கம்:சிவஞானம்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்களிடத்து அன்பு 73

குப்புசாமிப் பிள்ளை அதன் துன்பத்தைப் போக்குவதற் குப் பெரிதும் முயன்ருர். அவர் அவ்வாறு முயன்றும் அது இன்பமுறவில்லை. ஆதலால், அவர் வேருெரு புதிய குதிரைக் குட்டியை மிக்க விலை கொடுத்து வாங்கி அதனேடு விளையாட விட்டார். அப்போதுதான், அது வயிருர உணவு கொள்ள ஆரம்பித்தது ; ஓடி ஆடித் திரியத்துடங்கியது ; துன்பம் நீங்கி இன்புற்றிருந்தது.

குப்புசாமிப் பிள்ளை, இறந்துபோன அக்குதிரை யின் உடலைத் தம் தோட்டத்தின் இடையே புதைத்து வைத்தார் ; அதளுேடு அமையாது, அந்த இடத்தில்,

உயர்ந்த சலவைக் கற்களால் ஒரு சிறு மேடையும் அமைத்தார் ; அம்மேடையின்மீது அக்குதிரையைப் போல் சிறு பதுமை ஒன்றும் செய்து வைத்தார்.

ஒவ்வொரு நாளையும் விரல் விட்டு எண்ணிக் கழித்துவந்து அவர்கள், ஒரு வாரம் கழிந்ததும் அம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவஞானம்.pdf/80&oldid=563112" இலிருந்து மீள்விக்கப்பட்டது