பக்கம்:சிவஞானம்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 சி வ ஞான ம்

முதியவரைக் காண ஆவலாய் ஓடிவந்தனர். அன்று குப்புசாமிப் பிள்ளை தம் வீட்டுத் திண்ணையின்மீது காணப்படவில்லை. ஆதலால், அவர்கள் தோட்டத் திற்குள் சென்றனர். இறந்துபோன குதிரையின் உருவச்சிலையொன்று அத்தோட்டத்தின் இடையே பொலிவுற்று விளங்குதலையும், தாயை இழந்த அக் குதிரைக் குட்டி, வேருெரு புதிய குதிரைக் குட்டியோடு இன்புற்று விளையாடிக் கொண்டிருத்தலையும் கண்ட சிறுவர்கள் கழிபேருவகை பூத்தனர். அப்பதுமைக்கு அருகே ஓர் அழகிய சாய்ப்பு நாற்காலியின்மீது சாய்ந்து கொண்டிருந்த குப்புசாமிப் பிள்ளை அச்சிறுவர்களைக் கண்டு புன்முறுவல் செய்தார். அச்சிறுவர்கள் அவ். விடத்தே அமர்ந்து நெடுநேரம் வரையில் ஏதேதோ பேசிக்கொண்டிருந்தனர்.

பின்னர், சிவஞானம் என்னும் சிறுவன் குப்பு சாமிப் பிள்ளையை நோக்கி, "தாதா, பசுவின் கன்றைக் குறித்து எழுதி யிருக்கின்றீர்களே-அதுவும் உண்மை தான ?" என்று அன்புடன் வினவிஞன்.

அதற்குக் குப்புசாமிப் பிள் ளை,"ஆம், உண்மையே ; அக்கன்று நம் தோட்டத்திற்கு அயலில் உள்ள இடை யன் வீட்டில்தான் இருந்தது," என்ருர்.

இவர்கள் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கையில் வயது சென்ற சுவாமியார் ஒருவர், ஒரு சிறு நாய்க் குட்டியைக் கையில் தாங்கிக் கொண்டு, அவ்விடத்தே. வந்தார். அவரைக் கண்டதும் குப்புசாமிப் பிள்ளை "வாருங்கள் ; காய்க்குட்டிச் சுவாமிகளே," என்று அன்புடன் கூறித் தம் இருக்கையை விட்டு எழுந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவஞானம்.pdf/81&oldid=563113" இலிருந்து மீள்விக்கப்பட்டது