பக்கம்:சிவஞானம்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

சி வ ஞான ம்




முயலுங்கள்-முயலுங்கள்' என்று மிக்க ஆராமையோடு

கூறினர்.

சுவாமியார், சிறுவர்களுக்கும் போதித்த நல்லுரையைக் கேட்ட குப்புசாமிப் பிள்ளை பெரிதும் மனமுவந்தார். பிள்ளைகள் யாவரும் சுவாமியாரின் முகத்தையே உற்று நோக்கிக்கொண் டிருந்தனர். சில நிமிஷங்கள் வரையில் அவர்களில் ஒருவரும் வாய்திறக்கவில்லை, பின்னர்ச் சிவஞானம் என்னும் சிறுவன்,

சுவாமியாரை நோக்கி, ”சுவாமிகளே, எல்லா உயிர்களிடத்தும் அன்பாய் இருத்தல் வேண்டும் என்று தாங்கள் கூறியிருக்கின்றீர்கள். அதில் எனக்கு ஒரு சந்தேகம் உண்டாகிறது. அஃதாவது, தேள், பாம்பு முதலிய கொடிய ஜந்துக்கள் உள அன்றோ ? அவை நம்மைக் கடித்தலையே பெருந்தொழிலாகக் கொண்டிருக்கின்றனவே ; அவைகளிடம் நாம் எவ்வாறு அன்பாய் இருத்தல் கூடும் ? என்பதேயாகும்," என மிக்க பணி வோடு கேட்டான்.
”ஆம், சுவாமி ; அதை எங்களுக்கு விளக்குதல் வேண்டும்”, என்று விரைந்து மொழிந்தான் மணி வண்ணன் என்னும் மற்றுமோர் சிறுவன்.

அப்போது சுவாமியார், சிறுவர்களை நோக்கி, “பிள்ளைகளே, நீங்கள் கேட்பது நியாயமே. ஆனால்,

அவை நம்மைக் கடிப்பதே தொழிலாகக் கொண்டிருக்

கின்றன என்றெண்ணுவது பெரும் பிழை. உயிர்கள்

தம்மைத்தாம் காத்துக்கொள்ளுதற்கு இறைவன் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொருவித சக்தியை அளித்திருக்கின்றார். தேளையும் பாம்பையும் கண்டால் நமக்கு எவ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவஞானம்.pdf/85&oldid=563117" இலிருந்து மீள்விக்கப்பட்டது