பக்கம்:சிவஞானம்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்களிடத்து அன்ட H5.

      • , *) |னபு

அவன் முகத்தே தாண்டவமாடினுள். அவ்வீரன் அடி யற்ற நெடுமரம்போல் அசைவற்றுக் கிடந்தான்.

"மணி நான்காயிற்று ; நாகமோ நகர்ந்த பாடில்லை. அச்சமயம் அவனுக்கு ஒரு நிமிடம் ஒரு யுகம்போல் தோன்றிற்று. அவன் எத்துணை நேரம் பொறுத்திருப் பான் பாவம் ! - நான் இன்று இந்நாகத்திற்கு இரை யாவேன் இது திண்ணம்-திண்ணம், என்று எண் னினுன் அப்போர்வீரன். எனினும், அவன் உள்ளம் அப்போதும் உறுதி கொண்டிருந்தது. இன்னமும் பார்ப்போம்-இன்னமும் பார்ப்போம்,' என்னும் எண் ணமே அவன் நெஞ்சில் நீங்காதிருந்தது. பொறு மையே வடிவாகக் கொண்டிருந்த அப்போர்வீரன் இவ் வண்ணம் அவ்விரவு முழுவதும் மனம் பொறுத்திருந் தான். அதிகாலை மணி ஐந்தாயிற்று ; அப்போது, அவ் வறையின்கண் சிறிது வெளிச்சம் உண்டாயிற்று. அதுகண்ட அப்பெரும்பாம்பு அவன் மார்பை விட்டு மெல்ல நகர்ந்து எங்கோ மறைந்து விட்டது.

சிறுவர்களே, அப்போது அவ்வீரன் எவ்வளவு மகிழ்ச்சியடைந்திருப்பான் ! அவன் உள்ளம் எவ்வளவு குளிர்ந்திருக்கும் ! நீங்களே நன்கு எண்ணிப் பாருங் கள். எனினும், சிறுவர்களே, அவன் அவ்விடத்தை விட்டு மிக்க மகிழ்ச்சியுடன் எழுந்து விட்டான். என்று எண்ணுகின்றீர்களா ? இல்லை-இல்லை. அப் போர்வீரன் அப்போது தன் கண்களையும் திறந்துபார்க்க வில்லை ; உடலையும் அசைக்க வில்லை. ஏனெனில், அவன் தன் மார்பின் மீதிருந்த பாரம் நீங்கியதை உணர்ந்தானே யன்றி அப் பாம்பு இன்ன இடத் தில் இருக்கின்றது என்பது அவனுக்குத் தெரியாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவஞானம்.pdf/92&oldid=563124" இலிருந்து மீள்விக்கப்பட்டது