பக்கம்:சிவஞானம்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்களிடத்து அன்பு 91

நான் கூறுவேன். ஆதலால், நாம் நம் உடலையும், இருக்கையையும் சுத்தமாக வைத்துக் கொள்ளுவோமா ஞல் அவை நம்மை வந்து அணுகமாட்டா, கடவுளும் அவைகளுக்கு வேறு பிறப்பினை அளித்து வேறுவிதமாக அவைகளை உயிர் வாழும்படி செய்துவிடுவார். அதுவே என் எண்ணம்,' என்று புன்னகையுடன் ஒருவாறு பதிலுரைத்தார்.

அப்போது குப்புசாமிப் பிள்ளை அச் சிறுவர்களை நோக்கி, 'பிள்ளைகளே, உண்மையில் உயிர்களிடத்து அன்புள்ளவன் அவைகளின் நியாய அநியாயங்களைக் கவனிக்க மாட்டான். அவைகளுக்கு உதவி புரிதலி லேயே அவன் கண்ணுங் கருத்துமாய் இருப்பான். இன்ன பிராணிகளைக் கொன்று போடவேண்டும் என் றும், இன்ன பிராணிகளைப் போற்றி வளர்க்கவேண்டும் என்றும் எண்ணுவது சாதாரண மனிதர்களின் கொள்கை. அறிவிற் சிறந்த பெரியோர்களோ எந்தப்

பிராணியையும் வதைக்க எண்ணுர்கள்.

“இவ்விதம் கொல்லா விரதம் பூண்டு பல பெரி யோர்கள் இவ்வுலகில் வாழ்ந்து வருகின்ருர்கள். இறை யவனும் அவர்கள் அன்பிற்கு மகிழ்ந்து அவ்வப் போது அவர்கட்கு அருள்புரிந்து வருகின்ருன்.

ஒரு மூட்டைப் பூச்சியின் மாயம்

அருமைச் சிறுவர்களே, இதனை விளக்குவதற்கு நான் ஒரு சிறுநிகழ்ச்சியைக் கூறுகிறேன். சில ஆண்டு கட்கு முன்னர், ஒரு முதியவர் திருவிழாவைக் காணும்

பொருட்டுத் திருவண்ணுமலைக்குச் சென்றிருந்தார்.

சி. . 8

in is

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவஞானம்.pdf/98&oldid=563130" இலிருந்து மீள்விக்கப்பட்டது