பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 திருநாவுக்கரசரை ஒரு பாருங்கல்லில் கட்டினர்கள்; கடலில் தள்ளினர்கள்: திருநாவுக்கரசர் சொற்றுனே வேதியன் என்று பதிகம் பாடினர்: கல்லும் தெப்பமாக மிதந்தது. அதையே தெப்ப மாகக் கொண்டு மிதந்து திருப்பாதிரிப் புலியூரில் கரை ஏறினர். கோயிலுக்குச் சென்ருர்; வழிபட்டார், பதிகம் பாடினர்; திருவதிகைக்குப் போனர்; அங்கே பல ஆண்டுகள் சிவத்தொண்டு புரிந்துகொண்டு இருந்தார். பல்லவ அரசன் உண்மையை அறிந்தான்; சமண சமயத்தைக் கைவிட்டான்; சைவ சமயத்தைத் தழுவினன்; திருப்பாதிரிப் புலியூரில் இருந்த சமணர் மடத்தை இடித்தான்; திருவதிகையில் தன் பெயரால் ஒரு சிறு கோயிலைக் கட்டினன். திருநாவுக்கரசர் தலயாத்திரை செய்யப் புறப்பட்டார்; திருப் பெண்ணுகடம் என்ற தலத்துக்கு வந்தார்: "பொன்னுர்திருவடிக்கு ஒன்றுண்டு விண்ணப்பம்' என்று பதிகம் பாடினர், சமண சமயத்தில் இருந்த உடம்போடு வாழ எனக்கு விருப்பம் இல்லை; ஆகையால் இதைச் சுத்தம் செய்ய வேண்டும்” என்று வேண்டினர். சிவபெருமானின் ஏவலால் ஒரு பூதம் வந்தது; திருநாவுக்கரசரின் தோள்களில் இடபக் குறியும் சூலக் குறியும் இட்டுச் சென்றது. பிறகு திருநாவுக்கரசர் தில்லை எனப்படும் சிதம்பரத்துக்குச் சென்ருர். அங்கு நடராசப் பெருமானைத் தரிசனம் செய்து கொண்டார். அப்பொழுது என்று வந்தாய்' என்று இறைவன் கேட்பது போலத் தோன்றியது. பத்தளுய்ப் பாட மாட்டேன் என்ற பதிகம் பாடினர். பின்னர் அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்' என்ற பதிகமும் பாடித் தொழுதார். பிறகு சீர்காழிக்குச் சென்ருர். சீர்காழியில் சம்பந்தரைக் கண்டு வணங்கினர். சம்பந்தர், திருநாவுக்கரசரை அப்பரே என்று அழைத்தார். அன்று முதல் திருநாவுக்கரசருக்கு அப்பர் என்ற பெயர் வழங்கியது. அப்பர், திருச்சத்தி முற்றம் என்ற தலத்துக்குச் சென்ருர். 'கோவாய் முடுகி' என்ற பதிகம் பாடினர். 'சிவபெருமானே! உன் திருவடிகளை என் தலைமேல் பொறித்து வை" என்று வேண்டினர். இறைவன், 'நல்லுனருக்கு வா' என்று கூறினர்.