பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 அங்கிருந்து பாண்டிய நாட்டுக்குச் சென்று அப்பர் திரும்பினர்; திருப்புகலூர் என்ற தலத்துக்குச் சென்ருர், கோயிலில் திருத் தொண்டுகள் புரிந்தார். உழவாரப் படை புகுந்த இடங்களில் பொன்னும் மணியும் கிடைத்தன. அவற்றைப் பருக்கைக் கற்களாக நினைத்தார்; கோயிலைச் சுற்றி உள்ள குளத்தில் வீசி எறிந்தார். அப்பருக்கு வயது 81 ஆயிற்று. ஒரு சித்திரை மாதத்தில் சதய நாளில் 'எண்ணுகேன் என் சொல்லி எண்ணுகேளுே' என்று தொடங்கிப் புண்ணியா உன் அடிக்கே போதுகின்றேன்' என்று பதிகம் பாடி இறைவன் திருவடி நிழலில் அமர்ந்தார். 'ஆ ழிமிசைக் கல் மிதப்பில் அனேந்தபிரான் Վ911գ- போற்றி!' திருச்சிற்றம்பலம்