பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 திருக்கயிலையில் சுந்தரரைக் கண்டு அன்பு கொண்ட சேடிமார் இருவரில் ஒருவர் கமலினி, அவர் திருவாரூரில் பிறந்தார். அவருக்குப் பாவையார் என்று பெயர். ஒரு நாள் சுந்தரர் கோயிலில் பரவையாரைக் கண்டார். பரவையாரும் சுந்தரரைக் கண்டார். ஒருவர் மீது ஒருவர் அன்பு கொண்டனர்; திருமணமும் நடந்தது. சுந்தரர் நாள்தோறும் திருக்கோயிலுக்குப் போய் வருவார். அக்கோயிலில் ஒரு பெரிய மண்டபம் இருக்கிறது. அதற்குத் தேவாசிரிய மண்டபம் என்று பெயர். அங்கே சிவனடியார்கள் பலர் இருந்தனர். சுந்தரர் 'அவர்களுக்குத் தொண்டு செய்யும் நாள் எந்நாளோ?' என்று நினைத்துக்கொண்டு செல்வார். ஒரு நாள் சிவபெருமான், “தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்' என்று அடி எடுத்துக் கொடுத்தார். சுந்தரர் தம் காலத்திலும், தமக்கு முன் காலத்திலும் வாழ்ந்த அடியார்கள் பலரையும் சொல்வி அவர்களுக்கு அடியேன்” என்று ஒரு பதிகம் பாடினர். அதற்குத் திருத்தொண்டத் தொகை என்று பெயர். திருவாரூருக்கு அப்பால் குண்டையூர் என்று ஒரு தலம் இருக் கிறது. அங்கு ஒரு வேளாளர் இருந்தார். அவருக்குக் குண்டையூர் கிழார் என்று பெயர். அவர் சுந்தரருக்கு வேண்டிய நெல் முழு வதும் கொடுத்து வந்தார். அப்பொழுது மழை பெய்யவில்லை; விளைவு குறைந்தது. குண்டையூர் கிழார் இறைவனை வேண்டினர். இறைவன் திருவருளால் குண்டையூர் முழுவதும் மலைபோல் நெல் குவிந்தது. அச்சமயம் சுந்தரர் குண்டையூருக்கு வந்தார். இந்த வியப்பான காட்சியைக் கண்டார்; குண்டையூர்க்கு அருகில் உள்ள தலம் ஆகிய இருக்கோளிலி என்ற தலத்துக்குச் சென்ருர்; இறைவனே நோக்கி, "நீள நினைந்து' என்று தொடங்கிப் பதிகம் பாடினர். சிவபெருமான் ஏவலால் பூதங்கள் வந்தன: நெல் முழு வதையும் திருவாரூரில் கொண்டு போய்ச் சேர்த்தன. பரவை யாரும் மனம் மகிழ்ந்தார். சுந்தரர் திருநாட்டியத்தான்குடி என்ற தலத்துக்குச் சென்ருர் அங்கே கோட்புலியார் என்ற அன்பர் இருந்தார். அவருக்கு இரண்டு பெண்கள் இருந்தனர். ஒருவர் சிங்கடியார்: இன்னொருவர் வனப்பகையார். இவ்விருவரையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். என்று கோட்புலியார் சுந்தரரை வேண்டினர். சுந்தரர் அவ்விரு வரையும் தம் மக்களாக ஏற்ருர்.