பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 இருப்பதால் உனக்கு மாணிக்கவாசகன் என்ற பெயர் தந்தோம்" என்று இறைவன் கூறி அருளினர். மாணிக்கவாசகர் தாம் கொண்டுவந்த பொருள்களை எல்லாம் இறைவனுடைய தொண்டுகளுக்காகச் செலவு செய்தார்; திருப் பெருந்துறையில் பெரிய கோயிலைக் கட்டினர். பின்னர் "மெய்தான் அரும்பி விதிர்விதிர்த்து' என்று தொடங்கும் திருச்சதகப் பாடல் களைப் பாடினர்; அங்கேயே தங்கியிருந்தார். இங்ங்ணம் உலகப் பற்றை விட்டு இறைபணியில் ஈடுபட்டிருப் பதை உடன் வந்தவர்கள் அரசனிடம் முறையிட்டனர்; 'குதிரைகள் வாங்குவதற்காகக் கொண்டுவந்த பொருளை எல்லாம் வாதவூரர் கோயில் கட்டிச் செலவு செய்துவிட்டார் ' என்று கூறினர்கள். அரசன், 'வாதவூரரை உடனே அழைத்து வருக' என்று ஆட்களை ஏவினன். வந்த ஆட்களிடம் 'ஆவணி மூலநாளில் குதிரைகள் வரும்' என்று மாணிக்கவாசகர் சொல்லி அனுப்பினர். பிறகு மாணிக்கவாசகர் இறைவன்மீது, 'நாடகத்தால் உன் அடியார் போல் நடித்து' என்று பாடினர். அரசன் அனுப்பிய ஆட்கள் மாணிக்கவாசகரை அரசனிடம் அழைத்துச் சென்றனர். அரசன் சினங்கொண்டான்; மாணிக்க வாசகரைக் காவலில் வைத்தான் துன்பப்படுத்தினன். அப் பொழுது மாணிக்கவாசகர் துயரம் தாங்காது, 'தரிக்கிலேன் காய வாழ்க்கை' என்று பாடினர். சிவபெருமான் திருவிளையாடல் புரியத் திருவுளம் கொண்டார்; காட்டில் உள்ள நரிகளை எல்லாம் குதிரைகளாக மாற்றினர்; வேதத்தையே குதிரையாகக் கொண்டு அதில் அமர்ந்து குதிரைச் சேவகளுக அரண்மனைக்கு வந்தார். குதிரைகள் எல்லாம் வந்து சேர்ந்தன. அரசன் மகிழ்ந்தான்: மானிக்கவாசகரை விடுதலை செய்தான். அவரிடம் மன்ருடி மன்னிப்புக் கேட்டுக்கொண்டான். மாணிக்கவாசகரும் இறைவன் கருணையை எண்ணி எண்ணி மகிழ்ந்தார்; “அன்பினல் அடியேன் ஆவியோடு ஆக்கை' என்று பாடினர். குதிரைச் சேவகனக வந்த இறைவன், தாம் கொண்டு வந்த குதிரைகளின் உடற்கூறு பற்றிய இலக்கணங்களை எல்லாம் கூறினர்; அவற்றின் சிறப்பைக் கூறினர்; அரசனிடம் அக் குதிரைகளை ஒப்படைத்தார். அரசனும் மகிழ்ந்தான்; பரிசுகள் அளித்து அனுப்பின்ை.