பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

239 சென்ருர்; அங்கே சிவபெருமான் காட்சி கொடுத்தார்: "பிணக்கு இல்லாத என்று தொடங்கிப் பதிகம் பாடித் துதித்தார். இங்ஙனம் மகிழ்ந்து பாடிய மாணிக்கவாசகர் கடைசியில் சிதம் பரம் வந்து சேர்ந்தார்; நடராசப் பெருமானை வணங்கினர்; மகிழ்ந்தார்; “புற்றின் வாள் அாவும் அஞ்சேன் "இணை ஆர் அடி' என்ற பதிகங்களை பாடினர். 'இறைவனை நேரில் கண்டு வணங்குகிருேம்; அப்போது ஐம்புலனும் இறைவனிடத்திலேயே ஒன்றிவிடும்; புறச் செயல்கள் ஒன்றும் நடைபெற மாட்டா' என்று பொருள் படும்படி, "கண்கள் இாண்டும்' என்று தொடங்கிப் பாடினர். சிதம்பரத்திலேயே பல நாள்கள் நடராசப் பெருமானை வணங்கிக் கொண்டு இருந்தார், மாணிக்கவாசகர். அச்சமயம் புத்த குருமார்கள் மாணிக்கவாசகரிடம் வாதுசெய்ய வந்தார்கள்: அவர்கள் தோற்ருர்கள். அப்பொழுது இலங்கையினின்றும் ஓர் அரசன் வந்திருந்தான். அவன் மகள் ஊமை; அப்பெண்ணை மாணிக்கவாசகர் பேசச் செய் தார்; வாதுசெய்ய வந்த புத்தர் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் அந்தப்பெண் பதில் கூறினுள். வாதவூரர் இக்கேள்விகளேயும் விடை களையும் பாடல்களாக அமைத்தார்; பூசுவதும் வெண்ணிறு' என்று தொடங்கிப் பாடினர். இப்பதிகத்துக்குத் திருச்சாழல் என்று பெயர். ஒருநாள் நடராசப் பெருமான் அந்தணர் உருவம் கொண் டார்; மாணிக்கவாசகரிடம் வந்தார்; "நான் பாண்டிய நாட்டில் இருந்து வருகிறேன்; தாங்கள் பாடிய திருவாசகம் முழுவதையும் ஏட்டில் எழுதிக்கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆதலால் அவற்றைப் பாடுங்கள்: நானும் எழுதிக் கொள்கிறேன்' என்ருர், மாணிக்கவாசகரும் எல்லாப் பாடல்களையும் பாடினர். பெரு மானும் எல்லாவற்றையும் எழுதிக் கொண்டார். பிறகு இறைவன் மாணிக்கவாசகரைப் பார்த்து, 'பாவை பாடிய வாயால் கோவை பாடுக' என்ரும். மாணிக்கவாசகர் இருக்கோவையார்' என்ற நூலைப் பாடினர். அதனையும்