பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/345

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

326 வெண்காடருக்கும் முத்தம்மை என்னும் பெயருடைய நற்குண மங்கை நல்லாளுக்கும் மகளுகப் பிறந்தார். புத்திரன் பிறந்த மகிழ்ச்சியைப் பெற்ருேர்கள் வெகு சிறப் பாகக் கொண்டாடினர். ஓரிரு தினங்களில் திருவெண்காடர் வட நாட்டிற்குத் தீர்த்த யாத்திரை சென்ருர். அவர் திரும்பிவர இய லாத சூழ்நிலையில் சிலகாலம் காசியில் தங்கிவிட்டார். இத் தருணத்தில், முத்தம்மை, பூம்புகாரில் மகனுடன் தனித்து இருக்க இயலாத நிலையில் திருவண்ணுமலையிலுள்ள தன் மகள் ஆதிலகல்டிமி வீட்டிற்கு வந்தாள். வந்த் இடத்தில் முத் தம்மை நோய்வாய்ப்பட்டு உயிர் நீத்தாள். ஆதிலகங்மி குழந்தை அருணகிரியைக் கண்ணும் கருத்துமாக வளர்த்து வரலாள்ை. இளமையிலேயே அருணகிரி தேவாரம், திருமந்திரம், திரு முருகாற்றுப்படை மற்றும் இலக்கண இலக்கிய புராண நூல்களே எல்லாம் ஐயம் திரிபறக் கற்றுத் தேர்ந்தார். ஆனல், அருணகிரி, தனது முன்வினைப் பயனல் கற்றபடி நடக்க வில்லை. மாருக வாழ்க்கையில் கண்டபடி நடந்தார். மால் மருகனை நினைக்க வேண்டிய அவரது மனம் மயக்கும் மங்கையர் களை நாடியது. மோனத் தவம் இருக்க வேண்டியவர், மோக வ3லயில் சிக்கி உழன்ருர், சிற்றின்பம் என்னும் சேற்றில் வீழ்ந்து கிடந்தார். அருணகிரி பொன் இழந்தார், பொருள் இழந்தார்: பெரு மதிப்பையும் இழந்தார்; நோய்வாய்ப்பட்டார். அருணகிரியின் பொன்போல் பிரகாசித்த மேனி நோயால் பொலிவு குன்றியது. அவருக்கு உலகமே இருண்டது. வாழ்க்கையை வெறுத்தார். பழனி ஆண்டியைப் பற்றிப் பாடப் போகும் பக்தன் திருவண்ணு மலை வீதிகளில் ஆண்டி போல் திரிந்துகொண்டிருந்தார். ஒரு நாள் அருணகிரி, திருவண்ணுமலை திருக்கோயில் வழியாக வந்துகொண்டே இருந்தார். அப்பொழுது அவரது முன்வினையின் நற்பயனல் பேரின்பம் இம்மையிலும் வந்து கூடத் தொடங்கியது. திருவண்ணுமலைப் பெருமான், முதியோன் வடிவம் தாங்கி அருண கிரியின் முன்னல் எழுந்தருளினர். "அன்பனே' என்று அழைத்தார், ஆண்டவன்.