பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/389

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

j/U தருணம் இது ஐயா! மிகுத்த கனமதுறு நீள் சவுக்ய tharūnnam idhu Aiyaa miguththa ganamadhuru neell savukya சகல செல்வ யோகம் மிக்க பெருவாழ்வு sakala selva yogam mikka peruvaazhvu தகைமை சிவஞானம் முத்தி பரகதியும் நீ கொடுத்து thagaimai sivagnaanam muth thi paragadhiyum nee koduth thu உதவிபுரிய வேணும் நெய்த்த வடிவேலா! udavipuriya vēnnum neiththa vadivēlaa ! அருணதள பாத பத்மம் அது நிதமுமே துதிக்க arunnathalla paadha padhmam adhu nidhamumẽ thudhikka அரிய தமிழ் தான் அளித்த மயில்வீரா ! ariya thamiz thaan alliththa mayilveeraa ! அதிசயம் அநேகம் உற்ற பழநி மல்ே மீது உதித்த adhisayam ans.gam utra Pazhani malai meedhu udhiththa அழக திருவேரகத்தின் முருகோனே Azhaga ! Thiruvēragaththin Murugönē ! உன் திருவடிகள் ஆகிய கோயிலை அரை நிமிஷ நேரமும் தவம் செய்யும் முறையில் தியானம் செய்யத் தெரியாமல் இருக்கிறேன். நான் உயிர் இல்லாத பொருள்; அறிவு இல்லாதவன்; முடன்: மந்தபுத்தி உடையவன்: தீவினை செய்து பிறந்தவன்: தனியே இருப்பவன் ஏழை-இவற்ருல் நான் கலக்கம் அடைவே?ை எனக்கு நீ கருணை புரியாமல் இருக்கிருய்! என்ன குறை என் னிடம் இருக்கிறது? இப்பொழுது சொல். கயிலை மலையில் உள்ள தலைவர் ஆகிய சிவபெருமான் பெற்ற குமரனே! கடகம் அணிந்த புயங்கள் ரத்தினம் பதித்த பொன்மாலை; வெட்சிமாலை-நறுமணம் வீசும் கடப்பமலர் மாலை-இவற்றை அணிந்திருப்பவனே ! ஐயா! எனக்கு (அருள் செய்ய) இது நல்ல சமயம்! அதிகமான பெருமை-நிலையான சுகம்-எல்லாச் செல்வங்கள் யோகம்-மிகச் சிறந்த வாழ்வு-சிறப்பு-சிவஞானம்-முத்தியாகியபரகதி ஆகிய இவற்றைக் கொடுத்து உதவி செய்ய வேண்டும். நெய் பூசிய வடித்த வேலை உடையவனே!