பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/394

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

375 (நான் விரும்பியவாறு) பிறக்கவும், சாகவும் (முடியாது); துதிக்கவும், கண்களால் (உன்னைக் காணவும் முடியாது): (உன்னை) அழைக்கவும், (கால்களால்) நடக்கவும் (முடியாது); (விரும்பிய இடத்தில்) இருக்கவும் (முடியாது); பெண்களோடு மனைவாழ்க்கையை இன்பமாக நடத்தவும், அதில் சலிப்புக் கொள்ளவும் (முடியாது): இடையீடு இல்லாமல் வருகிற வினை ஆகிய நோயை எரித்து அழிக்கவும், அவ்வாறு செய்ய நினைக்கவும், அவ்வினை களைத்தாங்கவும் (முடியாது): -இவற்றை எல்லாம் செய்ய நான் யார்? கல்லில் இருந்து நாரை உரித்த அரசனே! காதில் (கேட்பதற்கு) அமுதம்போன்று இருக்கும் (உன் திருப் பெயர் ஆகிய) மந்திரத்தை அருளிய அரசனே! உன் பெருமையை அறியாதவர் மனத்தில் இருக்காதவனே! கண்ணுடி போன்ற பக்கங்களை உடைய வேலை ஏந்தியவனே தக்கன் என்னும் அரசனை முன்னெரு காலத்தில் கிரீடம் பொருந்திய தலையை வலிமை பொருந்திய அம்பால் அறுத்த தங்கவடிவம் ஆனவனே! அரசனே! குறமகள் ஆகிய வள்ளியின் கணவனே! வயலூர் அரசனே! மூவர்க்கும் தலைவனே! 19 spés—to be born G) ooks-to die &w @&šas-to worship Joseppää-to call p;l_&as-to walk QCD its—to be Qusario-fr—woman; wife ssG)—house

  • &#3—to enjoy *sūlās—to detest GNASnr sb.35Gp5rru 1—continuous paasaS G|Birul – paasas (good and evil deeds)