பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/426

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

407 'அரியும் சிவனும் ஒண்ணு அறியாதவன் வாயில் மண்ணு' ' என்ற மூதுரையும் இங்கே நினைவு கூரத்தக்கதாகிறது. 1865ஆம் ஆண்டில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை நிறுவி உலக மெல்லாம் பரவச் செய்த வள்ளலாரின் இயற்பெயர் இராமலிங்கம் என அமைந்தது மிகப் பொருத்தமானதே. இராமலிங்கம் ஆறுமாதக் குழந்தையாக இருந்தபோது தந்தையார் காலமானர்! தாயார் பிள்ளைகளுடன் தாம் பிறந்த மாராகிய சின்னக்காவனம் சென்ருர். அங்கே இராமலிங்கம் ஏழு வயது வரையில் தம் தாயாரைப்பெற்ற பாட்டியாரின் செல்லப் பிள்ளையாக வளர்ந்தார். மகாவித்வான் காஞ்சிபுரம் சபாபதி முதலியாரிடம் கற்றுவந்த இராமலிங்கத்தின் தமையனர், தம் குருநாதர், சபாபதி முதலியார் அவர்களிடம் தம் தம்பிக்கும் கல்வி கற்பிக்க ஏற்பாடு செய்தார். அதல்ைதான் சபாபதி பிரசங்கம் செய்தபோது இராமலிங்கம் கற்றுச் சொல்லிச் சொல்லியாக விளங்க நேர்ந்தது. சபாபதி சென்னையில் சமயச் சொற்பொழிவு செய்தபோது தம்பி இராமலிங்கம் அதற்குரிய பாடல்களை இனிய குரலில் பாடினர். (கட்டவர் எல்லோரும் இன்புற்றனர். தமையனருக்குத் தம்மைப் போலவே தம்பியும் சொற்பொழிவு ஆற்ற வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. அதல்ை அவர் தம்பியைக் காஞ்சிபுரம் அனுப்பித் தமக்குத் தமிழறிவு ஊட்டிய ஆசிரியரிடமே கற்க ஏற்பாடு செய்தார். இராமலிங்கம் சுயமாகவே மிக உயர்ந்த பாடல்களை இயற்றிப் பாடியதை அந்த ஆசிரியர் கேட்டார். தாம் இராலிங்கத்திற்கு என்ன கற்பிக்க முடியும் எனத் திகைத்தார். எனவே, இராம லிங்கம் ஒரு தெய்வீகக் கவிஞர் என்பதை உணர்ந்து அவரை அவருடைய தமையனரிடமே அனுப்பி விட்டார். சபாபதிக்கு ஒன்றும் புரியவில்லை. இராமலிங்கம் வழக்கம் போல் அடிக்கடி ஆலயங்களுக்கே சென்று பாடத்தொடங்கினர். சபாபதி தம் மனைவியை அழைத்துக் கற்க வேண்டிய நூல்களைக் கற்காமல் இராமலிங்கம் இப்படி ஆலயங்களிலேயே இருந்தால் அவனை என்ன செய்வது' என்ருர், இராமலிங்கத்தின் அன்னை யாரிடம், தாம் கொடுத்திருந்த வாக்குறுதியைச் சபாபதியின்