பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/434

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

415 1867ஆம் ஆண்டில் சிதம்பரம் இராமலிங்க அடிகள் பாடிய எண்ணுயிரம் பாடல்களே ஆறு திருமுறையாக்கி, முதல் ஐந்து திரு முறைகளையும் அன்பர் இறுக்கம் இரத்தினம் முதலிய பல அன் பர்கள் வேண்டுகோளுக்கு இணங்கி வெளியிட அனுமதி தந்தார். அதில் தொழுவூர் வேலாயுதனர் சிதம்பரம் இராமலிங்க அடிகளை திருவருட்பிரகாச வள்ளலார் எனக்குறிப்பிட்டிருந்தார். இதை அறிந்த அடிகள் அவரை முதலில் கடிந்து கொண்டார். அவர் நடுங்குவது உணர்ந்து “திருவருட் பிரகாச வள்ளல் ஆர் என்று கேட்கிற சிதம்பரம் இராமலிங்கம்' என்று பிரித்துக் காட்டி ஆறு தல் அளித்தார். எவ்வுயிரும் துன்புறும் தருணம் இன்புறச் செய் கின்ற சீவகாருண்ய மூர்த்தியாக நம் அடிகள் திகழ்ந்தார் என்ப தற்கு இது தக்க உதாரணம். திருவருட்பாவை உலகத்துக்கு வழங்கிய வள்ளலார் அகிம்சை நெறியாகிய இன்ன செய்யாமையின் மணிமுடியாகத் திகழ்ந்தார். சனி நீராடு' என்பதற்கு வெந்நீரில் குளி' என்பதே பொருள். வேறு விதமாகச் சொல்வது எல்லாம் தெரியாமை என இனிய முறையில் மறுப்பு வழங்கிய சிலர் அறியாமை என்ருே மடமை என்ருே கூறவில்லை. சொல்லிலும் சிவகாருண்யம் துலங்கியது. நம் பெருமான் பலருக்கும் வழங்கிய உபதேசங்கள் வெளி வந் திருக்கின்றன. உலகைத் துறவசமல் இறைவனை அடையும் ஒளி நெறியை உபதேசித்தவர் திருஅருட் பிரகாச வள்ளலார். 'புறப் பற்று அகற்றத் தொடங்காதே பெண்ணே புலை அகப்பற்றை அறுத்தாய் நினைக்கே இறப்பு அற்றது' என்று பாடியவர் வள்ள லார். அவர் பாடிய ஆருந் திருமுறைப் பாடல்கள் 1880 ஆம் ஆண்டு வெளிவந்தன . அவர் 30-1-1874 அன்று வெள்ளிக்கிழமை இரவு பன்னிரண்டு மணிக்கு மேட்டுக்குப்பத்தில் சித்திவளாகத் திருமாளிகையில் முத் தேக சித்தி பெற்ருர், மரணம் இலாப் பெருவாழ்வைப் பெற்ரும். இன்றும் சுத்த சன்மார்க்க அன்பர்களுக்கு அவரவர் விரும்பும் வடிவிலே தோன்றி அருள் புரிந்து வருகிரு.ர். வள்ளலாரின் பத்து அருள்வாக்குகள் 1. கடவுள் ஒருவரே. அவர் அருட்பெரும் ஜோதி வடிவினர். 2. அவரை ஜோதி வடிவத்திலேயே வழிபட வேண்டும். 3. எவ்விதத்திலும் சிறு தெய்வங்களே வழிபடவே கூடாது.