பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/473

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

454 தேவர்கள் எல்லாரும் சிந்திக்கும் பாதம் Thēvargall ellaarum sindhikkum paadham தெள்அமுது ஆய் உளம் தித்திக்கும் பாதம் Thell amudhu aay ullam thithikkum paa dham மூவரும் காணு முழுமுதல் பாதம் Mūvarum kaannaa muzhu mudhal paadham முப்பாழுக்கு அப்பால் முளைத்தபொன் பாதம் Muppaazhukku appaal mullaiththa pon paadham அருள்பெரும் சோதியது ஆகிய பாதம் Arull perum sodhiyadhu aagiya paadham அம்மையும் அப்பனும் ஆகிய பாதம் Ammaiyum appanum aagiya paadham பொருள்பெரும் போகம் புணர்த்திய பாதம் Porullperum bogam punnarththiya paadham பொன்வண்ணம் ஆகிய புண்ணிய பாதம் Ponvannnnam aagiya punnnniya daadham ஆடிய திருவடி, அம்பலத்தில் ஆடிய திருவடி: ஆடிய திருவடி, அம்பலத்தில் நின்று ஆடிய திருவடி: வேதங்கள் பாடித் தேடிய திருவடி: பக்தி செய்கிற பக்தர்களுக்கு இனிக்கும் திருவடி, தேடுகிற தவசிகளுக்கு இனிமையான திருவடி: நாதாந்தம் ஆகிய இடத்துக்குத் தலைமை பொருந்திய திருவடி: நீங்காத வலிமை உடைய தீவினைகளைத் தீர்க்கிற திருவடி; எல்லாத் தெய்வங்களும் கண்டு வணங்கும் திருவடி: வராததொன்று வருவதுபோல் வந்த பொன்மயமான திருவடி வஞ்சம் பொருந்திய நெஞ்சில் வசிக்காத திருவடி; எல்லாத் தேவர்களும் மனத்தில் சிந்தனை செய்யும் திருவடி: தெளிவான அமிர்தம் போல் இருக்கிற தித்திக்கும் திருவடி: பிரமன், திருமால், உருத்திரன் ஆகிய மூவராலும் காண முடியாத முதற்காரணம் ஆக உள்ள திருவடி: முப்பாழ் எனப்படும் கடவுள் உலகம் உயிர் ஆகிய மூன்றுக்கும் அப்பால் தோன்றிய பொன் போன்ற திருவடி; அருள் பெருஞ்ஜோதிக்கு உரியது ஆகிய திருவடி: அம்மை ஆகவும் அப்பன் ஆகவும் உள்ள திருவடி: