பக்கம்:சிவ வழிபாடு.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விழிக்குத்துணை திருமென் மலர்ப்பாதங்கள் மெய்ம்மைகுன்றா Vizhikkuththunnai thirumen malarppaadanggall meymmikunrraa மொழிக்குத்துணைமுருகா எனும் நாமங்கள் முன்புசெய்த Mozhikkuththunnai Murugaa enum naamangall munbuseydha பழிக்குத்துணை அவன் பன்னிருதோளும் பயந்ததனி Fazhikkuththunnai avan panniruthollum bayandhathani வழிக்குத்துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே Vazhikkuththunnai Vadivelum - Sengkodan пnayuurannuппе கண்களுக்குத்துணையாக இருப்பவை, அவனுடைய அழகிய மென்மையான திருவடிகள். உண்மைத் தன்மை குறையாத பேச்சுக்குத் துணை ஆக இருப்பது, முருகா என்று சொல்லும் திருப்பெயரே ஆகும். முன் பிறவிகளில் நாம் செய்த வினைகள் தாக்காமல் இருப்பதற்குத் துணையாக இருப்பவை, அவனுடைய பன்னிரண்டு புயங்களும் ஆகும். பயந்து செல்லும் தனி வழியிலே துணையாக இருப்பவை, திருச்செங்கோட்டில் உள்ள முருகனது வடித்த வேலும் மயிலும் ஆகும். The helpmate to our eyes are His soft flower like Feet. For speech full of truth, the helpmate is His name "Muruga". To be free from the sins done in previous births, the helpmates are His twelve shoulders. When going in the way fearing, the javelin and the peacock of the Lord at Thiruchchengodu are the helpmates. (45) அன்பு என்னும் பண்பு எல்லாரிடத்திலும் அமைய வேண்டும். இயற்கையாகத் தாயினிடத்தில் அன்புகாட்டு வோம்; தம்பி தங்கைகளிடத்து அன்பு காட்டுவோம்; பிறகு மனைவியினிடத்தில் அன்பு, பின்னர் அவள் பெற்றெடுக்கும் 91

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/101&oldid=833314" இலிருந்து மீள்விக்கப்பட்டது