பக்கம்:சிவ வழிபாடு.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நரம்புகளால் பின்னி இருக்கிறது, தசையால் மூடப்பட்டிருக் கிறது; இத்தகைய வீடு இது. இந்த வீட்டை விட்டு (உயிர்) பிரிந்தால் வேலால் (கிரெளஞ்ச மலையைத் துளைத்த முருகப் பெருமானுடைய இரண்டு திருவடிகளைத் தவிர்த்து வேறு அடைக்கலம் இல்லை. The body is built of skin-walls; It rests on twenty four bones! Two legs are erected; It has a curved back; Two hands are swinging; It has been spinned by the nerves; If the soul should leave such a fleshy body, we have no other refuge than the Feet of the Lord who pierced Kraunch Hill by His javelin. (48) தனிமரம் தோப்பு ஆகாது. ஒரேமாதிரியான பல மரங்கள் இருந்தால் அது ஒருவகைத் தோப்பு, பலவிதமான மரங்கள் ஒருங்கு இருந்தால் அது இன்னொருவகைத் தோப்பு: இது பலவகையான் அமைந்த தோப்பு. ஒரு நிறம் பொருந்திய ஆடை உண்டு பல நிறங்கள் கலந்த ஆடையுமுண்டு; இவ்விருவகை ஆடைகளும் அழகு உடையனவே. இங்கனமே இருக்கிறது உலகமும், ஒருமொழிபேசும் மக்கள், பலமொழி பேசும் மக்கள். இவர்களில் யாவரும் பலமரங்கள் உடைய தோப்புக்கு ஒப்பு. உலகம் இத்தகையதே. உலகம் பல நிறங்களையுடைய ஆடைபோன்றதாகவும் உள்ளது. ஆகவே பல வேறுபாடுகளில் ஒருமைப்பாடு காண்பதே அறிவுடைமை ஆகும். ஆகவே நிறம் மொழி இனம் முதலியவற்றால் வேறுபாடு கற்பிக்காமல், ஒருங்கு வாழ முயற்சிப்பதே மேலானது. காவிக்கமலக் கழலுடன் சேர்த்துஎனைக் காத்தருள்வாய் Kaavikkamalak kazhaludan sērththuenaik kaaththarullvaay துாவிக்குலமயில் வாகனனே துணையேதும் இன்றித் Thuvikkulamayil vaaganane thunnaiyedhum inrrith 95

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/105&oldid=833322" இலிருந்து மீள்விக்கப்பட்டது