பக்கம்:சிவ வழிபாடு.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உன்னை மதியாதவர்களுக்கும், மதிப்பவர்களுக்கும் அறிவைக் கொடுக்கும் அறிவு மியம் ஆனவனே! மக்களுக்கும், தேவர்களுக்கும் நன்மைகளைக் கொடுக்கும் நன்மையே உருவானவனே ! எல்லாருக்கும் பொதுவில் நடனம் ஆடுகிற சிவமே! என்னுடைய அரசே! நான் பாடுகிற இசைப்பாடல்களை அணிகலன்களாக அணிந்து கொண்டு அருள் செய்வாயாக! O Ecstatic Joy that bestows rapture to the learned and the illiterate; O Grace (Eye) that gives sight to those having sight and to the blind; - O Boon that blesses the clever and the incapable; O Revered One that imparts Knowledge to those who regard you and regard not; O Immanent One that stands impartial to the Good and the wicked; O Virtuous One that bestows good to mortals and celestials; O SIVAM that Dances in the Public Hall for the sake of all; O Pre-eminent One (O my king!) Please do adorn yourself with the songs sung by me! (65) அவன் அன்றி ஒரணுவும் அசையாது என்பது பெரியோர் கூறும் பழமொழி. உலகம் சுற்றுகிறது. மக்கள் இயங்குகிறார்கள். எல்லாமும் அசைகின்றது. இந்த அசைவுஇயக்கம் இதற்கு எல்லாம் காரணம் என்ன? அணுவைப் பிளந்து ஆராய்ச்சி செய்தவர்கள் அணுவுக்கு உள்ளேயே ஏதோ ஒரு அசைவு இருக்கிறது என்று கூறுகிறார்கள். அங்ங்னமே இந்த இயற்கையான பெரிய அண்டத்துக்கு உள்ளே இருந்து இறைவன் அசைகிறான்- அசைக்கிறான். இதுவே நடராசப் பெருமானின் கூத்து. பெருமான்- பரமன் - ஆடுகிறான். எல்லாம் அசைகின்றன. இயங்குகின்றன. ஆகவே நம்மை இயங்க வைக்கும் நடராசப்பெருமானை வணங்கு வோம். வாழ்த்துவோம். 127

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/136&oldid=833393" இலிருந்து மீள்விக்கப்பட்டது