பக்கம்:சிவ வழிபாடு.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

The brahmins at Thillai asked for the meaning of the songs. Vasagar pointed to Lord Nataraja and said that the songs referred to Him. So saying he became one with the Lord. In the month, of December the songs of the famous "Thiruvembavai" are sung by people all over. These were followed by Thirukkovaiyar composed by him again at the request of the Lord in praise of the King. Both Thiruvachagam and Thirukovaiyar form the eighth Thirumurai in Saivite Literature. அருணகிரிநாதர் முருகப் பெருமானின் பெருமையை சந்தத்தோடு பாடும் திருப்புகழ் பாடல்களை இயற்றியவர் அருணகிரிநாதர். இவர் காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்திருந்த வெண்காடருக்கும் முத்தம்மையாருக்கும் மகனாகப் பிறந்தவர். திருவண்ணாமலை யிலிருந்த தமக்கையார் ஆதிலக்குமியின் ஆதரவில் வளர்ந்தார். கல்வி கேள்வியில் வல்லவரான அருணகிரியார், இளமையில் தீய ஒழுக்கத்துக்காளானார். அதனால் வறுமை வாய்ப்பட்டதுடன் தொழுநோயால் தொல்லையுற்றார். மனம் வாடிய அருணகிரியார் உயிரை விட முடிவு செய்து ஒரு நாள் திருவண்ணாமலைக் கோபுரத்தின் உச்சியில் நின்று கிழே குதித்தார். முருகப் பெருமான் கீழே விழாது இவரைத் தடுத்தாட் கொண்டருளினார். தம் அருட்கோலத்தை அருணகிரியார்க்கு காட்டிய முருகபெருமான், "முத்து என்று தொடங்கிப் பாடுவாயாக" என்று அடியடுத்துக் கொடுத்து மறைந்தார். "முத்தைத் தரு பத்தித் திருநகை" என்று தொடங்கி நுாற்றுக்கணக்கான திருப்புகழ்ப் பாக்களைப் பாடி அருணகிரிநாதர் இறைவனைத் தொழுது வந்தார். அப்பகுதியை அந்நாளில் ஆண்டுவந்த பிரபுட தேவன் என்ற மன்னன் அருணகிரியாரின் அன்புத் தொண்டன் ஆனான். அவ்வூரில் வாழந்திருந்த சம்பந்தாண்டன் என்னும் பெயருடைய தேவி பக்தனுடன் அருணகிரிநாதர் கடவுள் உண்மையை உணர்த்தும் வாதப் போர் புரிந்து வென்றார். இந்திய நாடு முழுவதும் தீர்த்த யாத்திரை சென்று திருப்புகழ் பாடி வந்தார். 151

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/160&oldid=833445" இலிருந்து மீள்விக்கப்பட்டது