பக்கம்:சிவ வழிபாடு.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டினத்தார் "வாழையடி வாழையென வந்த திருக்கூட்ட மரபில், சைவமும் தமிழும் தழைக்கச் செய்த அருளாளருள், பட்டினத்துப் பிள்ளையார் தனியிடம் பெறுகின்றார். பட்டினத்தார் காவிரிப்பூம்பட்டினத்தில் வணிகக் குடியில் பிறந்தவர். சிவநேயர்-ஞானகலை அம்மையார், பட்டினத்தாரின் பெற்றோராவர். திருவெண்காடர் என்பது பட்டினத்தாரின் பிள்ளைத் திருநாமம். ஐந்து வயதிலேயே தந்தையை இழந்த பட்டினத்தார். கலைநலம் பலவும் வாய்க்கப் பெற்ற வணிகராய்த் திகழ்ந்தவர். தக்க வயதில் சிவகலை அம்மையாரை மணந்தார். இவர்களுக்கு மகப்பேறில்லாக் குறையைப் போக்கத் திருவிடைமருதுார் கோயிற் குருக்களின் வாயிலாக இறைவன் வழங்கிய குழந்தையைத் தன் பதுடுப "தி வளர்த்தார். அப்புத்திரனுக்கு மருதப்பிரான் என்று பெயரிட்டிருந்தார். மருதப்பிரான் பதினாறு வயதில், திரை கடலோடித் திரவியம் தேடி வந்தார். தேடிவந்த பொருளைத் தந்தையாரிடம் கொடுத்துவிட்டு, சிறு பெட்டியைத் தாயாரிடம் அளித்து மறைந்தார். மகனை எங்கு தேடியும் காணாத பட்டினத்தார், தம் மனைவி கையில் இருந்த சிறுபெட்டியைத் திறந்து பார்த்தார். அதனுள் காதற்ற ஊசியொன்றும், ஒலைச்சுருளில் "காதற்ற ஊசியும் வராதுகாண் கடை வழிக்கே" என்றெழுதப்பட்ட வாசகத்தையும் கண்டார். அதுவே அவர் துறவு பூண்பதற்குரிய உபதேச மந்திரமாயிற்று. பட்டினத்தார் முற்றுன் துறந்தாரேனும், தம் தாயார் மறைந்த போது, தாயாருக்குரிய ஈமக்கடன்களை பரிவோடும் உருக்கத்தோடும் அழுது புலம்பிச் செய்தார். தாய்க் கடமை முடிந்ததும் பன்னாடுகளுக்கும் வலம் வந்து, பக்திப்பனுவல்களைப் பாடியருளினார். அவ்வாறு பாடிய திருவிடைமருதுார் மும்மணிக்கோவை, திருக்கழுமாலை (சீர்காழி) மும்மணிக் கோவை, கோயில் நான்மணிமாலை, கச்சித் திருவந்தாதி, திருவேகம்ப மாலை, கச்சித் திருவகவல், 156

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/165&oldid=833456" இலிருந்து மீள்விக்கப்பட்டது