பக்கம்:சிவ வழிபாடு.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. படைக்கலமாக Padaikkalamaaga தில்லைச் சிற்றம்பலத்துத் தெய்வமே, இன்றல்ல இதற்கு முன் பிறவிகளிலும் நான் உன்னைத் தொழுதவன். நீ வெறுத்தாலும் விலகாதவன். உன்னைத் தொழுதவன். துாய திருநீறு அணிந்தவன். உன்னையே அடைக்கலமாகக் கொண்டவன். Oh Lord of Thillai Chittrambalam, I have worshipped Thee not only in this birth but in the previous one as well. Even if thy doth despise me, I shall not leave thee. I have been thy worshipper: I wear thine pure ash over my forehead. I have taken refuge in thee. Please accept me, Oh! Lord! - 18. நற்பதத்தார் Nat padhaththar அறிவே . . . ஒளியே . . . அழியும் உடலில் அலையும் உள்ளத்தில் நிலையாக நின்றுவிட்ட நிர்மலனே . . . உன்னை விடுவேனோ? மாட்டேன் . . . விடமாட்டேன் . . . விலகவும் மாட்டேன். Thou all knowing sacred sound! Thou hast decided to dwell in this imperishable body and within this wavering mind, do you think I will ever give thee up? No, I shall never give thee up nor will I let Thee move from here. 19. ஊனில் ஆவி Oonil avi என் பேச்சிலும் மூச்சிலும் நீயே இருக்குமாறு என்னைப் பழக்கிக் கொள்வேன் . . . திருச்சிற்றம்பலத்திலிருக்கும் பெருமானே என்னை வானுலகில் நிலையாக வைத்துவிடு. I shall accustom myself to keep only Thee both in my speech and in my breath. Thou who dwelleth in the great hall of Chidambaram, please say thou wilt keep me in heaven permanently. 167

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/178&oldid=833484" இலிருந்து மீள்விக்கப்பட்டது