பக்கம்:சிவ வழிபாடு.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25. வாழ்வாவது மாயம் Vazhvavathu mayam மாயமாகி மண்ணாகி மறையும் மனிதவாழ்வு பயணம் முடிவதற்குள் நல்லதைச் செய்ய வேண்டும். ஆடல்வல்லானைப் பாடிய பாடல் வல்லார்கள் நாவுக்கரசரும் ஞானசம்பந்தரும். அவர்கள்பால் ஈர்க்கப்பட்டு எத்தனையோ சிவனடியார்கள் தந்து சென்ற பாடல்களைப் பாடினால் மேலுலக வாழ்வு நிச்சயம். It is like a momentary spectacle when this body inevitably turns into dust and disappears. Before life's Journey ends must we not only do good deeds? Oh, Lord of Dance! Appar and Jnanasambandhar sung Thy praises with devotion and earnestness. Likewise if I were to sing their songs and of other devotees, will Thou not assure me of a place in heaven? 26. தானெனை முன்படைத்தான் Thanenai munpadaiththan ஊழி வெள்ளங்களில் மூழ்கிவிடாமல் நிற்பது திருநொடித் தான் மலையெனும் திருக்கயிலை. ஏழிசையில் இன் தமிழால் பாடிய பத்துப் பாடல்களைப் பரம்பொருளாம் சிவபெருமானுக்கு ஆழ்கடலே அறிவிப்பாய். Supreme Lord, Thou art seated on Mount Kailas which defies all floods, Teach me, Oh, Lord! to recite Thy ten verses sung in Thy praise and in beautiful Tamil and to the music of the Yal. 27. திருவாசகம் (மாணிக்கவாசகர்) - நமச்சிவாய Namasivaya நீ வாழ்க . . . நின் தாள் வாழ்க . . . நொடிப் பொழுதும் என்னை விட்டு நீங்கா நிறைவே வாழ்க # = போற்றுதலுக்கேற்றவன் நீ . . . புகழுக்கு ஏற்றவன் நீ . . . சாற்றுகின்ற வேதத்தின் சாரம் நீ . . . நெற்றிக் கண்ணனே . . 172

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/183&oldid=833495" இலிருந்து மீள்விக்கப்பட்டது