பக்கம்:சிவ வழிபாடு.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34. நானேயோ தவம் செய்தேன் Naneyo Thavam Seiythen என் தவமா எனக்கு உன்னைத் தந்தது. தித்திக்கும் தேனமுதம் போன்ற உன் திருநாமத்தைச் சொன்னேன். என்னிடம் நீயாக வந்து நெஞ்சில் புகுந்தாய் . . . அருள் புரிந்தாய். ஊன் பொருந்திய உடலில் உயிர்வாழும் வாழ்க்கை எதற்கு இனி எனக்கு . . . Do you think I attained Thy Grace through penance? | uttered Thy sacred name which is like elexir, sweet as honey. Then Thou didst answer my call and took residence in my heart and granted me Thy Grace. Hence, what need is there for me to continue with this life in this body? 35. பிணக்கில்லாத Pinnakkiladha முற்பிறவியில் செய்த நற்கருமங்கள் - இப் பிறவியில் நம்மை ஏற்றம் பெற வைக்கும். தீய கருமங்கள் துன்புறுத்தும், வினைப்பயன்களை நுகராமல் தப்ப முடியாது. வினை தீர்ந்தால் பிறவி நீங்கும். எஞ்சியிருந்தால் இன்னொரு பிறவி. ஆகவே எடுத்த மானிடப் பிறவியில் நல்லதையே செய்து அல்லல் படாமலிருக்க வேண்டும் என்று உன்னை நினைந்தேன். உவந்தருள் காட்டினாய் திருக்கழுக்குன்றத்திலே. I think of Thee Oh Lord because I am aware that the good deeds performed in the previous birth will have only good effects in the present one. Evil deeds will have the adverse effect. One cannot escape Karma. When Karma is completed there shall be no re-birth. If not, we have to be born again and again. Therefore in this birth in this human form only good deeds must be done. The Grace Thou bestowed on me at Thirukkazukkundram, Oh Lord has made me aware of this universal truth. 176

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/187&oldid=833503" இலிருந்து மீள்விக்கப்பட்டது