பக்கம்:சிவ வழிபாடு.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36. செழுக்கமலத் திரளன Sezhukkamalath thirallana நான் பொல்லாதவன், கல்வியறிவில்லாதவன். தூயவழி செல்லாதவன். இந்த நெறி கெட்டவனை இன்னும் தறிகெட்டுப் போகாமல் தடுத்தாட் கொள். அடைக்கலம் நீயே . . . அம்மை யப்பனே . . . == Oh what a villain am I and how illiterate! I. have not even followed the righteous path. Oh Lord such an evil one am I. Please save me Oh Lord from further destruction of this life. Thou art my father and my mother. Where else can I take refuge except in Thee. 37. புற்றில் வாளரவும் . . . Puttri] Vallaravum பாம்புக்கும் அஞ்சேன். பதறாமல் பொய் பேசும் பாவியர்க்கும் அஞ்சேன் சோம்பிக்கிடந்து சமுதாயத்தைச் சங்கடத்திற்குள்ளாக்கும் தீயருக்கும் அஞ்சேன். ஆனால் அஞ்சுவேன் என் ஐயனை அறியாத அவனின்றி வேறோர் தெய்வம் உண்டென்று சொல்லும் ஒருவனைக் கண்டால். | fear not snakes nor those who utter untruths shamelessly. The lazy who are bent on making the life of the community irksome do not trouble me. But if I meet one who says he knows not my Lord but acknowledges some one else, then indeed he angers me and gives me much cause for concern. 38. இணையார் திருவடி . . . Innaiyar Thiruvadi மலர் பறிக்க வாரீர். அல்லி மலர் பறிக்க வாரீர். ஐயன் திருவடி மலர் என் சிரமேல் பட்டதும் பொய்யான உணர்வை 177

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/188&oldid=833505" இலிருந்து மீள்விக்கப்பட்டது