பக்கம்:சிவ வழிபாடு.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49. தாயுமான சுவாமி பாடல்: ஆசைக்கோர் அளவில்லை Aasaikor Allavillai கடல் கடந்து சென்றும் பொருளிட்டுகிறோம். ஈட்டின பொருளைச் சிலர் சேமிக்கிறார்கள். சிலர் செலவழிக்கிறார்கள், சிலர் கடன்படுகிறார்கள். பட்ட கடனுக்குப் பயந்து பதுங்கிப் பொய் பேசுகிறார்கள். வட்டி கொடுக்க முடியாமல் வாடுகிறார் கள். வரவுக்கு மீறிய செலவு சரிவுக்குக் காரணமாகிறது. சிக்கனமாக இருந்தால் வாழ்க்கைச் சிக்கலிலே சிக்க மாட்டோம். பணச் சுமையால் மனச்சுமையில்லாதவன் தான் பரம்பொருளைக் கவலையின்றித் துதிக்க முடியும் பார்க்குமிட மெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் பூரணப் பொருளே போதுமென்ற மனம் தந்து தீது களைந்து ஆதரிக்க வேண்டும். What a life we lead! We cross seas to acquire wealth, some save, some waste and others run into debts, some to escape tell lies. Some are unable to meet their debt on account of over expenditure. Had they been thrifty there would have been no entanglement. You think of wealth then your mind fills with problems. How can I think of Thee if my mind is not content. Oh Lord, Thou who art Omni present, grant me peace of mind, save me and protect me. 50. ஐவகையெனும். . . Aivagaiyenum கல்வி கேள்விகளால் நம் இயற்கை அறிவு பக்குவப்படுகிறது. ஆக்கப்பணிகளுக்கு அறிவைப் பயன்படுத்த வேண்டும். ஐம்பூதங்களையும் மனிதன் அறிவால் வசப்படுத்தி வளர்ச்சிப் பணியிலே ஈடுபடுத்த வேண்டும். அதுவே உண்மையறிவின் தன்மையாகும். இந்த தன்மையே என் இடத்தில் இல்லையே! நீ தரவில்லையே. . . குரு அருள் இல்லாமல் திருஅருள் ஏது? What a gift is knowledge. Learning and enquiry develops this knowledge which is for the purpose of performing good deeds and to keep this mind under 183

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/194&oldid=833517" இலிருந்து மீள்விக்கப்பட்டது