பக்கம்:சிவ வழிபாடு.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64. கல்லார்க்கும் கற்றவர்க்கும் Kallaarkkum Katrravarkkum அறிவிலிக்கும் அறிஞனுக்கும் இனியவனே அந்தக னுக்கும் அருள் ஞானியர்க்கும் இசைந்தவனே! நல்லார்க்கும் தியார்க்கும் எல்லார்க்கும் உகந்தவனே! நானிசைக்கும் நற்பாடல் தேனிசையாய் ஏற்று நலம் தருவாய் என் அரசே! Thou refuseth not to show compassion either to the ignorant or to the good or to the wicked. My Lord wilt Thou not accept my songs and grant me bliss? 65. பார்த்தாலும் நினைத்தாலும் Paarththaalum Ninaiththaalum உலகத்தை இயக்குவது எந்த சக்தி அணுவுக்குள்ளும் இருந்து அசைப்பது எது? அண்டமாகி விரிந்து செயல்படுவது எது? பரமன் ஆடப் பாரெல்லாம் ஆடுகிறது. அந்த ஆட்டுவிக்கும் ஆடல் வல்லானைக் கரும்பாகி இனிக்கும் கள்வன்- கண்டாலும் அவன் கதை விண்டாலும் - செவி இனிக்கும் இசை உண்டாலும் திகட்டாத தீங்கரும்பு என் தலைவன். Thou art the creator of this earth and all energy even that which moves the minutest particle. As Thou danceth the entire world dances. How wonderful it would be to realise this Lord of the Dance? My Lord to see Thee and to hear of Thy doings produces everlasting bliss. 66. அருள் விளக்கே. . . Arull Villakke நினைத்தால் தித்திக்கும் உன் திருநாமம். உன் திருநாமத்தைத் கோத்து உருகாத மனத்தையும் உருக்கும் வண்ணம் பல்சுவையும் பாடலாக்கித் தந்திருக்கிறார்கள். சிவனடியார்கள். உன்னைப் பாடும் பாடல்களே பாடல்கள். . . அதைப் பாடும் நேரங்களே நல்ல நேரங்கள். என் பாட்டை 190

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/201&oldid=833537" இலிருந்து மீள்விக்கப்பட்டது