பக்கம்:சிவ வழிபாடு.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

From the day I was conceived in the womb, my mind melted to see your feet. I underwent a lot of suffering. Oh Lord residing at Thiru Otrriyuur! Oh Lord of the temple Thiru aalavaay of Madurail Oh Lord of Thiru aaruurl By seeing that I have no support, please feel pity on me Oh Lord abiding in Eakambam at Kaanchipuram! (10) நாக்கு இறைவன் பெயரைச் சொல்லிப் பழகினால், மனமும் அதில்தானே லயிக்கும். மனமும் வாக்கும் அந்த மந்திரத்தில் பழகினால் இறைவன் குடிகொள்ளும் இடமாக மனம் மாறும். அப்பொழுது அந்த மனம் துாய்மை உடையதாக இருக்கும். நன்மை உள்ள இடத்தில் நல்லனவே சேரும். நன்மையே 2–(5 எடுத்தாற்போன்ற நிலை ஏற்படும், அத்தகையவர் கூட்டுறவு எல்லாருக்கும் நன்மை விளைவிக்கும். நல்லவர்களோடு இனங்கி யிருப்பது நல்லது. அவர்களோடு சேர்ந்து இருந்தால் அவர்கள் நடுவில் இறைவன் வீற்றிருப்பான். திருச்சிற்றம்பலம் மாசில் வினையும் மாலை மதியமும் Massil veennaiyum maalai madhiyamum விசு தென்றலும் வீங்கிள வேனிலும் Veesu thendraalum veengilla venilum மூக வண்டறை பொய்கையும் போன்றதே Musu vanndarrai poygaiyum pondradhe ஈசன் எந்தை இணையடி நிழலே - Eesan endhai innaiyadi neezhale குற்றம் அற்ற வீணையின் இசைபோலவும், மாலைக் காலத்தில் காணப்படும் நிலாவைப் போலவும், இளவேனில் காலத்துக் குளிர்ச்சி போலவும், வண்டுகள் ஒலிக்கும் (மலர்கள் உள்ள) குளம் போலவும் இன்பம் உண்டாக்கும்; எது எனில்) எந்தை ஆகிய சிவபெருமானின் திருவடி நிழல். 16

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/26&oldid=833554" இலிருந்து மீள்விக்கப்பட்டது