பக்கம்:சிவ வழிபாடு.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(16) உடற்பயிற்சி முதலியவற்றைச் செய்கிறோம். உடல் நல்ல வலிமையோடு இருக்க இதற்குச் சந்தேகம் இல்லை. இருப்பினும் வலிமையான உடம்பு ஆயிற்றே என்று உயிர் இதில் இருக்கிறதா? இல்லை. இந்த உடம்பில் உயிர் இருக்கும்பொழுது ஆடுகிறோம்; ஒடுகிறோம் பாடுகிறோம். பேசுகிறோம். ஆனால் நேற்று இருந்தான், நான் அவனோடு பேசினேன், இன்று சற்று மார்பு வலிக்கிறது என்றான்! சிறிது நேரத்துக்கு எல்லாம் மூச்சு அடங்கிற்று. பேச்சும் அடங்கியது. இந்த நிலைமையை உலகில் காண்கிறோம். இதனை ஒவ்வொருவரும் அறியவேண்டும்! அறிந்து செயல்ப வேண்டும். திருச்சிற்றம்பலம் ஐயினால் மிடறு அடைப்புண்டு ஆக்கைவிட்டு Alyinaal midarru adaippunndu aakkaivittu ஆவியார் போவதுமே அகத்தார் கூடி Aaviyaar povadhumē agaththaar kudi மையினால் கண் எழுதி மாலை சூட்டி Maiyinaal KSTT ezhudhi Tnaalai chutti மயானத்தில் இடுவதன்முன் மதியம் சூடும் Mayaanaththiliduvadhanmun madhiyam chūdum ஐயனார்க்கு ஆளாகி அன்பு மிக்கு Aiyanaarkku aallaagi anbu Tnikku அகம்குழைந்து மெய் அரும்பி அடிகள் பாதம் Agamkuzhaindhu meyarumbi adigall paadham கையினால் தொழும் அடியார் நெஞ்சின் உள்ளே Kayinaal thozhum adiyaar negnchin ullllē கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே. Kanrrappūr Nadutharriyaik kaaunalaamē கபத்தால் தொண்டை அடைப்பட்டதும் இந்த உடம்பைவிட்டு உயிர் நீங்குகிறது. வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் கண்ணில் GETED தீட்டி மாலைபோட்டு மாயானத்துக்கு எடுத்துச் செல்வர். 32

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/42&oldid=833590" இலிருந்து மீள்விக்கப்பட்டது